Home சினிமா தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி மாறுகிறதா?

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி மாறுகிறதா?

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதியில் மற்றம் செய்யப்பட்டுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது. 

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி மாறுகிறதா?

சென்னை: தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதியில் மற்றம் செய்யப்பட்டுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது. 

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரவுள்ளது. வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.   

இதில் அஜித்துக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் படத்தை பார்க்க ஆர்வமாக இருப்பதாகக் கூறுகின்றனர். 

இந்த நிலையில் பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் கண்டிப்பாக வியாழன் அல்லது வெள்ளிக் கிழமைகளில் தான் வெளியாகும். ஆனால் நேர்கொண்ட பார்வை திரைப்படம்  வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி சனிக்கிழமை அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது படத்தை முன்கூட்டியே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

அஜித்தின் ஆஸ்தான கிழமையில் ஒன்றான வியாழக் கிழமையே, நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை படக்குழுவினரிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 
 

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி மாறுகிறதா?
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“ஆன்மீக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொற்கால ஆட்சி” – அமைச்சர் சேகர் பாபு

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் சிறிய கோவில்கள் முதல் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இந்து கடவுள்களை விமர்சித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது!

இந்து மத கடவுள்களை விமர்சித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டுள்ளார். சிறுபான்மை சமூகத்தின் உரிமை...

குழந்தை பெற்றுக்கொள்ள மனைவி செய்த முயற்சி- சில மணி நேரங்களில் கணவன் மரணம்

தனது கணவன் திடீரென்று கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, கணவன் உயிர் இழந்து விடுவார் என்பதை உறுதி செய்து கொண்ட மனைவி,...

“சென்னையிலிருந்து கடலூர், நாகைக்கு பயணிகள் கப்பல்”

சென்னை -புதுச்சேரி- காரைக்கால் இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து...
- Advertisment -
TopTamilNews