Home சினிமா தலைவி படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்...ரசிகர்கள் உற்சாகம்!

தலைவி படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்…ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின்  ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை  வரலாற்றை பலரும் படமாக எடுக்க முனைப்புக் காட்டி வந்த நிலையில்  இயக்குநர் விஜய் அதனைச் செயல்படுத்தி வருகிறார்.  தலைவி என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில்  ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார். மேலும் நடிகை பூர்ணா, மதுபாலா, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின்  ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

தலைவி

இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்குக் கதாசிரியரும் இயக்குநர்  ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் கதை எழுதுகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

 அரவிந்த் சாமி

சமீபத்தில் தலைவி படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேபோல் எம்ஜிஆராக மாறிய அரவிந்த் சாமி புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. 

ttn

இந்நிலையில் ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாளையொட்டி தலைவி படத்தின்   செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ஜெயலலிதா போல கருப்பு வெள்ளை சிகப்பு நிற கரைவைத்த புடவை கட்டி கங்கனா தோன்றியுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

ட்விட்டரில் கமலுக்கு ஆதரவாக ட்ரெண்டாகும் #மன்னிப்பாவது_மயிராவது!

மக்கள் நீதி மய்யத்தின் 4 ஆவது ஆண்டு தொடக்க விழா நாள் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “முதுமையை கேலி செய்ய முடியாது. அது உங்களுக்கும் வரும் எனக்கும் வரும். ஆனால்...

தமிழகத்தில் திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 11 கோடியே 30 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 25 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா...

சரத்குமார் தலைமையில் உருவானது 3 அவது அணி! அதிமுகவுக்கு ஆபத்து!!

அதிமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் அதிமுக கூட்டணியில்தான் உள்ளன என முதல்வர் கூறியிருக்கிறார். ஆனால் இதுவரை அதிமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என பிரேமலதா புலம்பிவருகிரார். அதேபோல் அதிமுக...

எடப்பாடி தொகுதியில் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் இமான் அண்ணாச்சி!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக -அதிமுக கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதேபோல் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, தாமக உள்ளிட்ட...
TopTamilNews