தர்பார் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்த ஏ.ஆர். முருகதாஸ்!

ரஜினிகாந்த் பிறந்தநாளில் தர்பார் ட்ரெய்லர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளியாகவில்லை. இந்நிலையில் படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் படத்தின் ட்ரெய்லர் தேதியை அறிவித்துள்ளார். 

ரஜினிகாந்த் பிறந்தநாளில் தர்பார் ட்ரெய்லர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளியாகவில்லை. இந்நிலையில் படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் படத்தின் ட்ரெய்லர் தேதியை அறிவித்துள்ளார். 

darbar

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2020 பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் ‘தர்பார்’. முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத் இசையமைத்த பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அண்மையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

 

இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம் நண்பர்களே, அதிரடியான தர்பார் ட்ரெய்லரை பார்க்க தயாராகுங்கள் !!! தர்பார் ட்ரெய்லர் வரும் 16 ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு வெளியாகிறது. நன்றி” என பதிவிட்டுள்ளார். முருகதாஸின் இந்த பதிவால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 
 

Most Popular

லட்சக்கணக்கில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – உலகளவில் கொரோனா நிலவரம்

சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்றவையே கொரோனா பரவலைத் தடுக்க கடும் போராட்டத்தில் உள்ளன.  இன்றைய தேதி...

விஜயவாடா தீ விபத்தில் 11 பேர் பலி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல இடங்கள் கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் விஜயவாடா பகுதியில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றும் கொரோனா வார்டாக மாற்றம்...

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது....

தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்வு!

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், நேற்று நொடிக்கு 50,000 கனஅடி...