Home சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் மீது வழக்குப்பதிவு

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் மீது வழக்குப்பதிவு

தயாரிப்பாளர்கள் சங்க விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை: தயாரிப்பாளர்கள் சங்க விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய முடிவுகளை பொதுக்குழுவை கூட்டாமல் தனிச்சையாக செயல்படும் விஷாலுக்கு எதிராக சிவா, கே.ராஜன், .எல்.அழகப்பன், ஜே.கே.ரித்திஷ், எஸ்.வி.சேகர், உதயா உள்ளிட்டோர், சங்க அலுவலகத்தை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், அந்த பூட்டை அகற்ற முயன்ற போது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்.

tfpc

அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக விஷால் மீது குற்றம்சாட்டி போலீசார் கைது செய்ததாக கூறப்பட்டது. தற்போது ஹபிபுல்லா சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள விஷால் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

vishal

குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அனுமதியின்றி கூடியது(151), தகராறில் ஈடுபட்டு பொது அமைதியை குலைத்தது(145) என 2 பிரிவுகளின் கீழ் நடிகர் விஷால் மீது பாண்டி பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு” : அமைச்சர் செங்கோட்டையன் புதிய தகவல்!

தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில்...

“மட்டையான பெண்ணை வேட்டையாடிய நண்பர்கள்”-பர்த்டே பார்ட்டிக்கு போன பெண் மேனேஜர் டேமேஜ் ஆன கதை

ஒரு பெண் ஈவென்ட் மேனேஜர் தன்னுடைய ஆண் நண்பர்களால் மதுவுக்குள் மயக்க மருந்து கலந்து கொடுக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பலருக்கு பாடமாக அமையும்.

‘மூன்றாவது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்’ : டெல்லியில் பரபரப்பு!

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகளின் போராட்டங்கள் 3ஆவது நாளாக தொடருகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு...

மீண்டும் புயல் : தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் !

அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த...
Do NOT follow this link or you will be banned from the site!