Home சினிமா தயாரிப்பாளராக களம் இறங்கும் நடிகர் அருள்தாஸ்… மண் வாசனையோடு தயாராகும் ‘தேரும் போரும்’..

தயாரிப்பாளராக களம் இறங்கும் நடிகர் அருள்தாஸ்… மண் வாசனையோடு தயாராகும் ‘தேரும் போரும்’..

தான் நடித்த அனைத்து கதாபாத்திரங்களிலும் தனது முழுமையான நடிப்பை இயல்பாக  வெளிப்படுத்திய தினேஷ் நடிக்கிறார்.

மதயானைக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக தென்தமிழகத்தின் வாழ்வியல் மற்றும் உறவுமுறைகளை மிக அழுத்தமாக பதிவு செய்து தமிழ்திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம்சுகுமாரன். அவர் அடுத்ததாக இயக்கும் திரைப்படம் “தேரும் போரும்” இதில் கதாநாயகனாக அட்டக்கத்தியில் அறிமுகமாகி  குக்கூ,விசாரணை இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் தான் நடித்த அனைத்து கதாபாத்திரங்களிலும் தனது முழுமையான நடிப்பை இயல்பாக  வெளிப்படுத்திய தினேஷ் நடிக்கிறார்.

ttn

மைனா,கும்கி, பைரவா,ஸ்கெட்ச் போன்ற பல வெற்றி படங்களின்  ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னனி கலை இயக்குனராக வலம் வரும் ராஜீவன் கலை இயக்குனராவும் லாரன்ஸ்கிஷோர் எடிட்டராகவும் பணியாற்றுகிறனர்.

ttn

இந்த படத்திற்காக ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடலாசிரியர் ஏகாதசி எழுதி  அனைத்து பாடல்களும் பதிவு செய்யப்பட்டுவிட்டதுமிகுந்த பொருட்செலவில் முன்னனி தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பங்குபெரும் “தேரும் போரும்” படத்திற்கு இப்போதே சினிமா வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ttn

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் முதல்வாரத்தில் சிவகங்கை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில்  துவங்க இருக்கிறது இத்திரைபடத்தை வில்அம்பு,கென்னடி கிளப் படங்களை தயாரித்த தாய் சரவணனின் நல்லுசாமி பிக்ஸர்’ஸ் சார்பாக  நடிகர் அருள்தாஸ் மற்றும் கார்த்திக்துரை இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்குகிறனர்…

Most Popular

கொல்லாதே! கொல்லாதே! 2003 TETதேர்வர்களை கொல்லாதே! சமரிமாலா ஆர்ப்பாட்டம்

திருச்சியில் முதன்மை கல்வி அலுவலகத்தின் முன்பு சமூக செயற்பாட்டாளர் சபரிமாலா தலைமையில், டெட் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 200க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.

‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகாது : இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். 'மாஸ்டர்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என அப்படத்தின் இயக்குநர்...

10 லட்சத்தை நெருங்கும் கொரோனா இறப்பு எண்ணிக்கை #Corona

உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது கொரோனா. இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொடவிருக்கிறது. செப்டம்பர் 23-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி,  உலகளவில் கொரோனாவின்...

அதிமுக எம்பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனுக்கும் விவசாயம் பற்றி தெரியாதா? முதல்வருக்கு ஸ்டாலின் பதிலடி!

மத்திய அரசின் சட்டங்களைப் பற்றி ஆராய்ந்து கருத்து சொல்ல விவசாயியாக இருக்க அவசியம் இல்லை என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Do NOT follow this link or you will be banned from the site!