Home தமிழகம் தமிழ் பழமையான மொழி என்பதை பிரதமர் ஏற்றுக் கொண்டதை உளமார பாராட்டுகிறோம்: மு.க. ஸ்டாலின்..

தமிழ் பழமையான மொழி என்பதை பிரதமர் ஏற்றுக் கொண்டதை உளமார பாராட்டுகிறோம்: மு.க. ஸ்டாலின்..

பிரதமர் தமிழை புறக்கணிக்கவில்லை, அவர் தமிழின் தூதராகவே உள்ளார் என்ற கருத்து பரவலாக எழுந்த வண்ணம் உள்ளது. 

ஐ.நா சபையில் பிரதமர் நரேந்திர மோடி  3000ஆண்டுகள் பழமையான தமிழ் மொழியை இந்தியாவின் வளர்ச்சிக்கு ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற புறநானூற்று பாடலை வைத்து மேற்கோள் காட்டி கூறினார். இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. மேலும், பிரதமர் தமிழை புறக்கணிக்கவில்லை, அவர் தமிழின் தூதராகவே உள்ளார் என்ற கருத்து பரவலாக எழுந்த வண்ணம் உள்ளது. 

 

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் ‘இந்தியாவின் ஆட்சி மொழியாக மாற்றி தமிழை பெருமைப் படுத்துங்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு கழகத் தலைவர் முக ஸ்டாலின் வேண்டுகோள்’ என்ற அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘தமிழ் தான் உலகில் பழமையான மொழி என்பதை பிரதமர் ஏற்றுப் போற்றியிருப்பதை திமுக சார்பில் உளமார வரவேற்கிறோம் என்றும், 8 ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக மாற்ற வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

மாவட்ட செய்திகள்

Most Popular

கீழ்பவானி கால்வாயில் மூழ்கி இளம்பெண் பலி… மாயமான தந்தையை தேடும் பணி தீவிரம்…

ஈரோடு பவானி அருகே கால்வாயில் குளித்த இளம்பெண் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், நீரில் மூழ்கிய அவரது தந்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று...

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 5 பேர் உயிரிழப்பு

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 11 கோடியே 40 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 25 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய...

தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பாஜக மீண்டும் பேச்சுவார்த்தை

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக தேர்தல் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது....

சென்னையில் போஸ்டர்கள், கொடிகளை அகற்றிய தேர்தல் அதிகாரி

சென்னையில் அனுமதி வழங்கப்பட்டுள்ள 196 இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம்...
TopTamilNews