Home சினிமா தமிழ்நாட்டை சுத்தப்படுத்துவதற்கு முன் ரசிகர்களை சுத்தம் செய்யுங்கள்: நடிகர் விஜய்-யை வசைபாடிய பிரபல நடிகர்!

தமிழ்நாட்டை சுத்தப்படுத்துவதற்கு முன் ரசிகர்களை சுத்தம் செய்யுங்கள்: நடிகர் விஜய்-யை வசைபாடிய பிரபல நடிகர்!

தமிழ்நாட்டை சுத்தப்படுத்துவதற்கு முன் உங்களது ரசிகர்களைச் சுத்தப்படுத்துங்கள் என்று நடிகர் விஜய்-யை நடிகர் கருணாகரன் சாடியுள்ளார்

சென்னை : தமிழ்நாட்டை சுத்தப்படுத்துவதற்கு முன் உங்களது ரசிகர்களைச் சுத்தப்படுத்துங்கள் என்று நடிகர் விஜய்-யை நடிகர் கருணாகரன் சாடியுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம்  அறிவித்த போது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படக்குழுவினர் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தியதை நடிகர் கருணாகரன் டிவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். இதனால் கடுப்பான விஜயின் ரசிகர்கள் அவரை தகாத வார்த்தைகளால் வசைபாடினர்.

karunakaran

இதையடுத்து அண்மையில் நடந்த சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், கடுப்பேற்றுபவர்களிடம் கம்முன்னு இருக்க வேண்டும் என தன் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் சில குட்டி கதைகள் கூறியும் அரசியல் தலைவர்களை அவர் விமர்சித்திருந்தார். இது குறித்து  விமர்சித்த  கருணாகரன், ‘குட்டி கதைகள் வெறும் அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தானா? ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் நடிகர்கள் தன் நண்பன், நண்பிகள் அதைப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்’ என விஜய்யை மறைமுகமாக சாடினார்.

 

இதற்கும் விஜய்யின் ரசிகர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டினர். இதற்குப் பதிலளித்துள்ள கருணாகரன், உன்னைப் போன்ற ஃபேக் ஐடியில் வந்து தகாத வார்த்தைகளால் பேசுவதால் தான் விஜய் சாரை வெறுக்கிறேன்’ என்று கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.ஆனாலும் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அவரைத் தகாத வார்த்தைகளால் விமர்சிப்பதால், ‘எனது அடுத்த கேள்வி எனது தாய் மொழியில் இருக்கும். ரெடியா சர்கார் அடிமைகளா?’ என்று கேட்டுள்ளார். தனது அடுத்த பதிவில், ‘நீங்கள் தமிழ்நாட்டை சுத்தப்படுத்துவதற்கு முன் உங்களது ரசிகர்களைச் சுத்தப்படுத்த வேண்டும்’ என்று நடிகர் கருணாகரன் நடிகர் விஜய்யை சாடியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

எம்.எஸ்.பி.யை காட்டிலும் குறைந்த விலைக்கு பயிர்களை விற்பனை செய்யும் விவசாயிகள்.. பிரியங்கா காந்தி வேதனை

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்.எஸ்.பி.) தற்போது உத்தரவாதம் உள்ளபோதிலும், அதனை காட்டிலும் குறைந்த விலைக்கு தங்களது பயிர்களை விற்க விவசாயிகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என பிரியங்கா காந்தி வேதனை மற்றும் குற்றம்...

மீண்டும் காங்கிரசில் அதிரடி மாற்றங்கள்…. பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவதற்காக காத்திருக்கும் சோனியா காந்தி…

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு, காங்கிரஸ் கட்சியில் மீண்டும் ஒரு மறுசீரமைப்பை சோனியா காந்தி மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில்...

நாட்டின் விவசாயிகளின் விருப்பத்தை குடியரசு தலைவரால் நிராகரிக்க முடியாது… பஞ்சாப் முதல்வர் நம்பிக்கை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை தனது மாநிலத்தில் அமல்படுத்துவதை...

என்கவுண்டரில் 127 பேர் அவுட்… குற்றம் மற்றும் குற்றவாளிகளை அரசு சகித்து கொள்ளாது.. யோகி ஆதித்யநாத்

அரசாங்கம் குற்றம் மற்றும் குற்றவாளிகளை சகித்து கொள்ளாத கொள்கையை கொண்டுள்ளது என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். 1959ம் ஆண்டில் லடாக்கின் ஹாட்...
Do NOT follow this link or you will be banned from the site!