Home தமிழகம் தமிழ்நாட்டின் புதிய சின்னமானது தமிழ் மறவன் பட்டாம்பூச்சி!

தமிழ்நாட்டின் புதிய சின்னமானது தமிழ் மறவன் பட்டாம்பூச்சி!

தமிழ்நாடு சின்னமாக அறிவிக்க முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின பாதுகாவலர் ஆகியோர் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

தமிழ்மறவன் பட்டாம் பூச்சி இனத்தை தமிழ்நாடு அரசு சின்னமாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு சின்னங்களாக திருவில்லிபுத்தூர் கோபுரம், பனைமரம், வரையாடு, மரகதப்புறா, செங்காந்தள் மலர், பலாப்பழம், பரதநாட்டியம், கபடி ஆகியவை உள்ளன. தற்போது தமிழ் மறவன் பட்டாம் பூச்சி இனத்தை (அறிவியல் பெயர்: கிற்றோ சோர்ரா தைஸ்) தமிழ்நாடு சின்னமாக அறிவிக்க முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின பாதுகாவலர் ஆகியோர் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்தனர். அந்தப் பரிந்துரையை பரிசீலனை செய்து தமிழ்மறவன் பட்டாம் பூச்சி இனத்தை தமிழ்நாடு அரசு சின்னமாக அறிவித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

பீட்ரூட்டை பயன்படுத்தி சருமம் மற்றும் முடியின் பாதுகாப்பை அதிகரிப்பது எப்படி?

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் மிகவும் ஆரோக்கியமானது மட்டுமல்ல, சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடியது. பீட்ரூட்டை பயன்படுத்தி சருமம் மற்றும் முடியை எப்படி இயற்கையான ஆரோக்கியமான முறையில் பராமரிப்பது...

விளக்கெண்ணெய் குளியல் : அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?

பொதுவாக குளியலுக்கு பயன்படுத்தப்படுவது நல்லெண்ணெய். உடல் சூட்டை தணிக்க நல்லெண்ணெயை நன்றாக தேய்த்துக் கொண்டு, ஊற வைத்து விட்டு குளிர்ப்பார்கள். ஆனால்? இது என்ன விளக்கெண்ணெய் குளியல்? கசப்புத் தன்மையுடன்...

ஸ்டாலினை புகழ்ந்து தள்ளும் கமல்

அரசியல் காரணங்களால் கருணாநிதியின் உடலுக்கு ஸ்ரீபிரியா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் வந்து அஞ்சலி செலுத்தியதோடு சரி, இறுதிச்சடங்கில் கூட கமல்ஹாசன் பங்கேற்கவில்லை. ’’கட்சிக்கு அப்பாற்பட்ட உறவு எங்களுடையது. நாட்டுக்கு ஒரு...

நெல்லை அருகே கார் மோதி முதியவர் உயிரிழப்பு

நெல்லை நெல்லை அருகே சாலையில் நடந்துசென்ற முதியவர் மீது கார் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நெல்லை மாவட்டம்...
TopTamilNews