Home அரசியல் தமிழக பாரதிய ஜனதா தலைவராக எல்.முருகன் நியமனம்!

தமிழக பாரதிய ஜனதா தலைவராக எல்.முருகன் நியமனம்!

தமிழக பாஜக கட்சியின் தலைவராகச் செயலாற்றி வந்த, தமிழிசை சௌந்தர ராஜனைக் கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக மத்திய அரசு நியமனம் செய்தது.

தமிழக பாஜக கட்சியின் தலைவராகச் செயலாற்றி வந்த, தமிழிசை சௌந்தர ராஜனைக் கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக மத்திய அரசு நியமனம் செய்தது. அதன் பின், தெலுங்கானா மாநிலத்தின் வளர்ச்சி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் தமிழிசை. அவருக்குப் பிறகு யார் அந்த பதவிக்கு வருவார்கள் என்று கடந்த 4 மாதத்திற்கு மேலாகக் குழப்பம் நிலவி வந்தது.

ttn

இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் அக்கட்சியின் நிர்வாகிகளிடம் யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து கருத்துக் கேட்கும் கூட்டம் நடந்தது. அதன் முடிவில் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன், A.P. முருகானந்தம் உள்ளிட்ட நபர்களுள் ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் படலாம் என்று தகவல் வெளியானது. இந்நிலையில், தமிழக பாரதிய ஜனதா தலைவராக எல்.முருகன் நியமிக்கபட்டுள்ளார் என பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.  எல். முருகன் தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவராக உள்ளார்.

tn bjp

 

மாவட்ட செய்திகள்

Most Popular

ஆண்மையை அதிகரிக்க உதவும் அஸ்வகந்தா!

ஆண்மை குறைபாடு என்றாலே தாம்பத்திய பிரச்னை என்று அர்த்தம் ஆகிவிட்டது. விறைப்புத் தன்மை குறைபாடு, விந்தணு சீக்கிரம் வெளிப்படுதல் என்று பல்வேறு பிரச்னைகள் இதில் அடங்கியுள்ளது.

செயற்கை ஆக்சிஜன் உதவியில்லாமல் சுவாசிக்க தொடங்கினார் சசிகலா

கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சசிகலா செயற்கை ஆக்சிஜன் உதவியில்லாமல் சுவாசிக்க தொடங்கினார். சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிறைக்கு சென்ற சசிகலாக்கு...

கார்ப்பரேட் முதலாளிகளை குளிர்விக்க விவசாயிகளை உயிர்பலி கொடுக்க துணிந்துவிட்டார் மோடி – கருணாஸ் எம்எல்ஏ

பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தெய்வீக பரப்புரைக்காக மதுரை வந்த நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் உசிலம்பட்டி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அழகு முதல் ஆண்மை வரை… கற்றாழையின் டாப் பயன்கள்!

நம் வீட்டிலேயே வளர்க்கக் கூடிய எளிய தாவரம் கற்றாழை. ஆரோக்கியம் முதல் அழகு வரை அது அள்ளித்தரும் பலன்கள் ஏராளம். வாரத்துக்கு 2-3 முறை கற்றாழையை உட்கொண்டு வந்தால் உடலில்...
Do NOT follow this link or you will be banned from the site!