Home அரசியல் தமிழக உள்ளாட்சித் தேர்தலின் வாக்காளர் பட்டியல் வெளியீடு...

தமிழக உள்ளாட்சித் தேர்தலின் வாக்காளர் பட்டியல் வெளியீடு…

மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படுமென்று அறிவித்தது.

கடந்த 3 வருடங்களுக்கு மேலாகத் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. அதனால், திமுக கட்சித் தலைவர் முக ஸ்டாலின் இந்த ஆண்டு கட்டாயமாகத் தேர்தல் நடத்த வேண்டும் என்று உயர் நீதி மன்றத்தில் மனு அளித்தார். அதனை விசாரித்த நீதி மன்றம் இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. 

Voters list

இதனையடுத்து, மாநில தேர்தல் ஆணையமும் உள்ளாட்சித் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படுமென்று அறிவித்தது. உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலைத் தயார் செய்து வரும் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. 

Voters list

அதன் படி, உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. மேலும், வாக்காளர் விவரங்களைச் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. 

மாவட்ட செய்திகள்

Most Popular

ஐபிஎல்: டெல்லி அணியை வீழ்த்தி ஐதராபாத் சன்ரைசர்ஸ் அசத்தல் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று 47-வது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ்...

தோஷங்களை போக்கும் பிரதோஷத்தில் சோமசூக்த பிரதட்சணம்!

உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து, தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் சிவப்பெருமான். இவ்வாறு உலகை காத்த உத்தமனான பரமனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம்....

புத்தகத்தில் உள்ளதை திருமா மேற்கோள் காட்டினார்; அவரே சொன்னதுபோல் பாஜக அரசியல் செய்கிறது- கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “குஷ்பு முன்னாள் நடிகை என்பதனால் அவரது கைதை...

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! சமூக வலைதளத்தில் உலாவரும் ரஜினியின் கடிதம்…

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களுடனான சந்திப்பின்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து,...
Do NOT follow this link or you will be banned from the site!