தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வில் மோசடிக்கு வாய்ப்பு – பென்சிலுக்கு வைகோ எதிர்ப்பு!

தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், தொகுதி-1 பணிகளுக்கான முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுடைய பட்டியலை வெளியிட்டு இருக்கின்றது.

தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வில் மோசடி நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் பென்சிலில் மட்டுமே எழுத வேண்டும் என்ற உத்தரவு தவறானது என்றும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ttm

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், தொகுதி-1 பணிகளுக்கான முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுடைய பட்டியலை வெளியிட்டு இருக்கின்றது.  துணை  ஆட்சியர்கள், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் பொறுப்புக்காக நடைபெறுகின்ற இந்தத் தேர்விற்கான நேர்காணல், வருகின்ற 23ம் தேதி முதல் நடைபெறுகின்றது. அதில் கலந்து கொள்பவர்களுடைய மதிப்பு எண்களை, பேனாவால் எழுதக்கூடாது; கண்டிப்பாகப் பென்சிலால் மட்டுமே எழுத வேண்டும் என, தேர்வு ஆணைய உறுப்பினர்களுக்கு தமிழக அரசு, அறிவுறுத்தி இருப்பதாக அறிகின்றேன். 

ttn

மதிப்பு எண்களைத் திருத்தி, தங்களுக்கு வேண்டியவர்களைத் தேர்வு செய்வதற்காக, இத்தகைய ஏற்பாடு நடைபெற்று வருகின்றது.  இந்த 21ம் நூற்றாண்டில், கணினிகளின் காலத்தில், வெளிப்படையாக ஒரு மோசடி நடைபெற இருக்கின்றது. அதையும், தமிழக அரசே நடத்தப் போகின்றது என்பது மிகவும் வேதனைக்கு உரியது. கிராமப்புறங்களைச் சேர்ந்த,  ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த, எந்தப் பின்புலமும் இல்லாத, தகுதி வாய்ந்த இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்ற இந்தக் கொடுமை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மதிப்பு எண்களைக் கணினியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அனைத்து நேர்காணல்களையும், காணொளிப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.”

Most Popular

‘எஸ்.வி சேகரை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை’.. அமைச்சர் காமராஜ் பேட்டி

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆனால் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு அளித்தும் முதல்வர் பழனிசாமியை விமர்சித்தும் எஸ்.வி சேகர் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் உங்கள் கட்சிக்கு அம்மா திராவிட...

“50 லட்சத்தை 25லட்சமாக குறைத்து முன்களப் பணியாளர்களின் தியாகத்தை சிறுமைப்படுத்தாதீர்கள் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

கொரோனா பேரிடர் காலத்தில் உயிரை பணயம் வைத்து உழைத்து கொண்டிருக்கும் முன்கள பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை அளிக்கப்படும் என...

செப்டம்பர் முதல் பள்ளிகளைப் படிப்படியாகத் திறக்க மத்திய அரசு திட்டம்!

செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக பள்ளிகளைத் திறப்பது பற்றிய வழிகாட்டுதல்களை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் தினசரி கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 50 ஆயிரம் கடந்து சென்று...

குழந்தைகள் மொபைலைப் பார்ப்பதை விட டிவி பார்ப்பது நல்லதுதா? #ParentingTips

கொரோனா காலத்தில் பெற்றோருக்கு இரண்டு கடும் பிரச்னைகள். ஒன்று வெளியில் சென்று பொருட்களை வாங்கச் செல்வது. ஏனெனில், அப்படிச் செல்லும்போது கொரோனா நோய்க் கிருமிகள் அவர்களைத் தொற்றிவிடக்கூடாது என்ற கவலை. அடுத்த பிரச்னை......