தமிழகம் வருகிறார் அமித்ஷா

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரும் 21-ம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரும் 21-ம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிரமாக வியூகம் அமைத்து வருகிறது. அதேபோல் பாஜகவை வீழ்த்த இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக – காங் – விசிக – மதிமுக – இடதுசாரிகள் சேர்ந்து தேர்தலை சந்திக்கும் சூழல் நிலவி வருகிறது. ஆனால் கூட்டணி குறித்து அதிமுகவோ, பாஜகவோ இதுவரை எதுவும் தெரிவிக்காமல் இருந்து வருகின்றன. அதேசமயம் அதிமுக – பாஜக கூட்டணி அமையும் என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரும் 21-ம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் வர இருக்கும் அவர், ஈரோட்டில் நடைபெற உள்ள பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் கூட்டத்திலும், பிப்ரவரி 1-ம் தேதி சென்னையில் நடைபெறும் பூத் கமிட்டி பொறுப்பாளர் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி ஜனவரி 27-ம் தேதி தமிழகம் வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Most Popular

“2 எதிரிகளுடன் ஒரே நேரத்தில் திமுக மோதி வருகிறது” : கருணாநிதி நினைவு தினத்தில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள நினைவிடத்தில் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதேபோல துரைமுருகன், டி ஆர் பாலு, கனிமொழி உள்ளிட்ட...

இலங்கை தேர்தல் – ராஜபக்‌ஷே கட்சி மாபெரும் வெற்றி. மற்ற கட்சிகளின் முழு விவரம்!

இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் ராஜபக்‌ஷே கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. நமது அண்டை நாடான இலங்கையில் ஆகஸ்ட் 5 –ம் தேதி தேர்தல் நடந்தது. ஓரிரு மாதங்கள் முன்பே நடைபெற...

மின்னல் வேகத்தில் சென்ற கார்… பறிபோன இளைஞர்களின் உயிர்!- கோவை பதறவைத்த விபத்து

கோயம்பத்தூர் அருகே இன்று அதிகாலையில் மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். கோயம்பத்தூர் மாவட்டம் கணுவாய் பகுதியை அடுத்த காளையணூர் பகுதியில் இன்று அதிகாலை வேகமாக வந்து...

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று விவரம் இதோ!

தமிழகத்தில் கொரோனா பரவலால் இதுவரை ஒட்டுமொத்தமாக 2.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்றும்...