Home தமிழகம் தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சில பகுதிகளில் இடியுடன் 30-40 கிமீ வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் கன மழைக்கு வாய்ப்புள்ளது. 

தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

weather-center-6

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 மணி நேரத்தில் திருப்பூரில் 9 செமீ மழையும், கோவை மற்றும் காங்கேயத்தில் 6 செமீ மழையும், நாகர்கோவில் மற்றும் சமயபுரத்தில் 5 செமீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொருத்தவரை மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஓரிரு இடங்களில் லேசமான மழை பெய்யலாம். சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஷியஸ் அளவில் இருக்கலாம் என்று கூறியுள்ளது

தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

அரசு கொள்முதல் நிலையங்களில் இருந்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதம்… விவசாயிகள் வேதனை!

ஈரோடு கோபி பகுதியில் செயல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல்; திமுக கூட்டணிக்கு வன்னியர் கூட்டமைப்பு ஆதரவு!

9 மாவட்டங்களில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என் ராமமூர்த்தி அறிவித்துள்ளார்.

“விஜய் பெயரை பயன்படுத்த தடை கோரிய வழக்கு” – மகனை எதிர்க்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்!

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு நிர்வாகிகளை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் அகில இந்திய தளபதி...

திடீரென அதிகரிக்கும் கொரோனா மரணம்; மூன்றாவது அலையின் தொடக்கமா?!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 309 பேர் கொரோனாவுக்கு பலியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த...
TopTamilNews