தமிழகத்தையே உலுக்கிய சென்னை மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிப்.1 ஆம் தேதி தீர்ப்பு

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அந்த குடியிருப்பில் வேலை பார்த்து வந்த காவலாளி, பிளம்பர், லிப்ட் ஆபரேட்டர்கள் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அந்த குடியிருப்பில் வேலை பார்த்து வந்த காவலாளி, பிளம்பர், லிப்ட் ஆபரேட்டர்கள் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 17 பேரும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை ஒருவர் பின் ஒருவராக அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரிய வந்தது. 

ttn

இந்த வழக்கில் பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேரும், அந்த குற்றத்தை மறைத்ததாக 11 பேரும் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் குழந்தைகள் வன்கொடுமை, போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே குற்றவாளிகளுள் ஒருவர் காசநோயினால் காலமானார். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தின் வழக்கு விசாரணை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

tttn

இதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகளும், அரசு தரப்பு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு 120 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் குற்றவாளிகளுக்கான தீர்ப்பு வழங்காமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குற்றவாளிகள் 16 பேருக்கும் வரும் பிப்.1 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...