தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை: தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: லட்சத்தீவுகள் முதல் உள் கர்நாடகா வரை வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகரில் 3 செ.மீ மழையும், மதுரை சோழவந்தானில் 2 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் பனிப்பொழிவின் தாக்கம் குறைந்தே காணப்படுகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த நிலை தொடரும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.