Home தமிழகம் தமிழகத்தில் மேலும் 673 பேருக்கு கொரோனா, 6 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 673 பேருக்கு கொரோனா, 6 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 9கோடியே 16ஆயிரமாக அதிகரித்துள்ளது. 19 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.

This image has an empty alt attribute; its file name is Coronavirus_Testing_Labs_PTI-1024x683.jpg

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 673 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 28ஆயிரத்து 287ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 6,653ஆக குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 62,683பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 59லட்சத்து 8 ஆயிரத்து 259ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 422 பேர் ஆண்கள், 251 பேர் பெண்கள். தமிழகத்தில் 249 பரிசோதனை மையங்கள் உள்ளன.

இன்று மட்டும் மொத்தம் 6பேர் உயிரிழந்துள்ளனர். 3பேர் தனியார் மருத்துவமனையிலும், 3பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,242 ஆக அதிகரித்துள்ளது. இன்று 821 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 9ஆயிரத்து 392ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

குடிநீர் தொட்டிக்குள் குதித்து அக்கா, தம்பி தற்கொலை… உருக்கமான கடிதம் சிக்கியது…

கோவை கோவை அருகே மனநிலை பாதிக்கப்பட்ட சகோதரியுடன், மென் பொறியாளர் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம்...

“சட்டசபைக்குள்..பாஜக எம்.எல்.ஏ ஒருத்தர் வந்தால் கூட ஆபத்து”

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் திமுக, பெரும்பாலான கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து வழங்கிவிட்டது. இன்னும் ஒரு சில கட்சிகளுக்கு மட்டுமே கொடுக்க வேண்டியிருக்கிறது....

திமுக வசம் 180 : த.வா.க, கொ.ம.தே கட்சிக்கு அழைப்பு!

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக திமுகவிடம் தற்போது 180 தொகுதிகள் உள்ளன. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும்...

திமுக கெடுபிடி : 6 தொகுதிக்கு ஓகே சொன்ன மார்க்சிஸ்ட் கட்சி!

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் திமுக, தொகுதி பங்கீடு பணியில் பிஸியாக இருக்கிறது. கடந்த முறை தேர்தல்களிலெல்லாம் கூட்டணி கட்சிகள் கேட்ட தொகுதிகளை வழங்கியது. ஆனால், இந்த...
TopTamilNews