Home தமிழகம் தமிழகத்தில் மேலும் 610 பேருக்கு கொரோனா, 6பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 610 பேருக்கு கொரோனா, 6பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 9கோடியே 38 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 20 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 610 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 30 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 6, 128 ஆக குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 52,307 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 51லட்சத்து 77 ஆயிரத்து 94 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 371பேர் ஆண்கள், 239 பேர் பெண்கள். தமிழகத்தில் 251 பரிசோதனை மையங்கள் உள்ளன.

இன்று மட்டும் மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் தனியார் மருத்துவமனையிலும், 2பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,257ஆக அதிகரித்துள்ளது. இன்று 775 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 11ஆயிரத்து 798 ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

“ஆதரவாளர்களுக்கு சீட் வேணும்” : ஆட்டம் காணும் இரட்டை தலைமை!

அதிமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு என தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் – ஈபிஎஸ் மோதல்; அதிமுக பரபரப்பு

அதிமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் தங்களது ஆதரவாளர்களுக்கு தொகுதிகளை ஒதுக்குவதிலும் வேட்பாளர்களை...

‘உண்மையான தர்ம யுத்தம் இப்போது தான் தொடங்குகிறது’ – டிடிவி தினகரன் சூசகம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணியில் அதிமுக, திமுக அதிரடியாக களமிறங்கியுள்ளன. திமுகவை ஒழித்துக் கட்ட வேண்டுமென பாஜகவுடன் கைகோர்த்து அதிமுக களமிறங்கியிருக்கும் நிலையில், அதிமுகவையும் சேர்த்து ஒழித்துக் கட்ட அமமுக...

காங்கிரஸ் என்னிடம் கூட்டணி பேசியது உண்மை: இவ்வளவு பெரிய கட்சி தவழலாமா?கமல்

திமுக கூட்டணியில் அதிக இடங்களை எதிர்பார்த்து ஏமாற்றம் ஏற்பட்டதால் அதிருப்தியில் இருந்த மதிமுக, விசிக, கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் கட்சிகள் தங்கள் பக்கம் வந்துவிடும் என்பது மாதிரியே பேசி வந்தார் கமல்ஹாசன்....
TopTamilNews