Home தமிழகம் தமிழகத்தில் தாமரையா? அமைச்சர் கடம்பூர் ராஜூ கிண்டல்

தமிழகத்தில் தாமரையா? அமைச்சர் கடம்பூர் ராஜூ கிண்டல்

தமிழகத்தில் தாமரை மலர ஒருபோதும் வாய்ப்பில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

சென்னை: தமிழகத்தில் தாமரை மலர ஒருபோதும் வாய்ப்பில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை கலந்துகொள்ளும் கூட்டங்களில் எதை பேசுகிறாரோ இல்லையோ, மறக்காமல் கூட்டம் முடியும் போது தன் கைகளை உயர்த்தி, “தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்.. தாமரை மலர்ந்தே தீரும்!” என்ற வசனத்தை மட்டும் உச்சரிக்க தவறியதே இல்லை. 

இவர் ஒரு புறம் இப்படி பேசிக் கொண்டிருக்க, தமிழக அரசியல் நிலைமையோ அதற்கு நேர் எதிராக இருப்பதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தமிழகத்தில் தாமரை ஒருபோதும் வாய்ப்பே இல்லை. அப்படி தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் பாஜக டெபாசிட் வாங்கி விட்டாலோ அல்லது நோட்டாவை விட அதிக வாக்குகள் பெற்றாலோ நல்லது” என கிண்டல் செய்துள்ளார்.

மேலும், அதிமுக ஆட்சி குறித்து தமிழிசை சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
 

மாவட்ட செய்திகள்

Most Popular

’எனக்கு வேணாம் கொரோனா தடுப்பூசி’ சொல்வது எந்த நாட்டு அதிபர் தெரியுமா?

கொரோனா பீதியில் ஒவ்வொரு நாளும் யுகமாகக் கழிந்து வருகிறது. உலகம் முழுவதுமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது. வல்லரசு நாடுகள் என பெருமை பேசும் நாடுகள் கூட கொரோனாவை தடுக்க...

தென் தமிழகத்தில் டிச.1 ஆம் தேதி முதல் மிக கனமழை : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில், உள் மாவட்டங்களில் லேசானது முதல்...

சிறுமிக்கு பாலியல் தொல்லை; 17 வயது சிறுவன் போக்சோவில் கைது

கோவை கோவையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் 5...

ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த வாலிபர் : விசாரணையில் தெரிய வந்த உண்மை!

கூடலூர் வடக்கு காவல் நிலையம் பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த இளைஞர் ஒருவர் பிடிபட்டார். தேனி மாவட்டம் கூடலூர்...
Do NOT follow this link or you will be banned from the site!