Home தமிழகம் தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது: பாஜக அறிவிப்பு

தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது: பாஜக அறிவிப்பு

தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்து விட்டது என அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் கூறியுள்ளார்

சென்னை: தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்து விட்டது என அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வேற்று பெற்று அரியணை ஏறியது. இந்த அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதையடுத்து, வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் மக்களவைக்கு தேர்தல் நடைபெறலாம் என தெரிகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

இதனிடையே, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்திலும் ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழுக்களை அமைத்துள்ளன.

இந்நிலையில், புதுச்சேரியில் மீனவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. கடந்த தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது போல, இந்த தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டுமென பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. இன்னும் ஒருசில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வகமாக அறிவிக்கப்படும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

‘நீங்க பேசுன பேச்சுக்கு..’ அனிதா சம்பத்தை கைத்தட்டி பாராட்டும் கமல்ஹாசன்: கடுப்பாகும் சுரேஷ்!

பிக் பாஸ் சீசன் 4ன் இன்றைய நிகழ்ச்சிக்கான 2ஆவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் விஜயதசமி கொண்டாட்டம் நடைபெற்ற போது அனிதா சம்பத்துக்கும், சுரேஷுக்கும்...

கார் டிரைவருக்கும், சொத்துக்கும் ஆசைப்பட்டு மாமனார், கணவர், கொழுந்தனை கொலை செய்த மேனகா

சென்னைக்கு அருகே இருக்கும் படப்பை நரியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுப்பராயன், தன் மகன்கள் செந்தில்குமார், ராஜ்குமாருக்கு கடந்த 2016ம் ஆண்டில் சொத்துக்களை பிரித்துக்கொடுத்துள்ளார். இதில் தம்பிக்கு அதிக சொத்துக்களை பிரித்துக்கொடுத்துவிட்டதாக...

110 ரன்களுக்குள் டெல்லியைச் சுருட்டியது மும்பை!

இன்றைய ஐபிஎல் தொடரில் முதல் போட்டி டெல்லி கேப்பிடல்ஸ் vs மும்பை இண்டியன்ஸ்! ஏற்கெனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய மும்பையும் மூன்றாம் இடத்தில் உள்ள...

தஞ்சாவூர்: தண்ணீர் இன்றி காய்ந்து வரும் நெற்பயிர்கள் – கூடுதல் நீர்திறக்க கோரிக்கை

தஞ்சை மாவட்டம் குடமுருட்டி ஆற்றில் பாசனத்திற்காக குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்படுவதால், சுமார் மூவாயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் காய்ந்து கரும் நிலை ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் சம்பா,...
Do NOT follow this link or you will be banned from the site!