Home தமிழகம் தமிழகத்தில் குப்பைக்கூடையை வைத்து பலே கொள்ளை! விழி பிதுங்கும் போலீசார்!

தமிழகத்தில் குப்பைக்கூடையை வைத்து பலே கொள்ளை! விழி பிதுங்கும் போலீசார்!

சென்ற வாரம் இந்த பயிற்சி மையத்தில், ரெண்டு பேர் திருடும் நோக்கத்தோடு இரவு நேரத்தில் பயிற்சி மையத்தின் கதவை தாழ்ப்பாளை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

நாலு கடை ஏறி இறங்கி அதன் பிறகு எங்க கடைக்கு வாங்க என்று லலிதா ஜுவல்லரி ஓனர் பத்திரிக்கை, டிவி என்று எல்லா இடங்களிலும் திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருந்ததைத் தப்பா புரிஞ்சுக்கிட்டு திருச்சி லலிதா ஜுவல்லரியில் கைவரிசை காட்டிய திருடர்கள் தான் சொன்ற வார ஹிட். அந்த கடைத் திருட்டின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, உலகம் முழுவதுமே பழைய சார்லி சாப்ளின் படங்களை நினைவு படுத்தி ஹிட் அடித்தது. அதுவும் குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டு முகமூடியைப் பயன்படுத்தி கன ஜோராக சாவகாசமாக திருடிச் சென்றார்கள்.

Lalitha jewellery robbery

அதே போல திருச்சியில் இன்னொரு சம்பவமும் நடந்து போலீசாரை விழி பிதுங்க வைத்துள்ளது. திருச்சியில் தாளக்குடிப் பகுதியில், 5 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்களுக்கான தையல் மற்றும் கம்ப்யூட்டர்  பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த குறுகிய கால பயிற்சி வகுப்பில் எப்போதும் குறைந்தது 20க்கும் மேற்பட்ட பெண்களாவது பயிற்சி பெற்று வருவார்கள். சென்ற வாரம் இந்த பயிற்சி மையத்தில், ரெண்டு பேர் திருடும் நோக்கத்தோடு இரவு நேரத்தில் பயிற்சி மையத்தின் கதவை தாழ்ப்பாளை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

Robbery

பின் மையத்தில் இருந்த தையல் இயந்திரங்கள், கைப்பேசி, மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாய் ஆசையாசையாய் நோட்டமிட்ட கொள்ளையர்களுக்கு அந்த இடத்தில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டிருந்தது அதிர்ச்சியைக் கிளப்பியது. இதன் பிறகு நடந்தது தான் காமெடியின் உச்சம். அவர்களை காமிரா முழுவதும் பதிவு செய்த பிறகு, இருவரும் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறிச் சென்றனர்.

Robbery

சிறிது நேரத்திற்கு  பிறகு, வாசலில் வைக்கப்பட்டிருந்த குப்பைக் கூடையை முகமூடியாக தலையில் மாட்டிக் கொண்டு மீண்டும் இரண்டு கொள்ளையர்களும் உள்ளே நுழைந்து அங்கிருந்த ரூ.5000 பணத்தை மட்டும் திருடிச் சென்றனர். இது குறித்து பயிற்சி மைய நிர்வாகி ராஜேந்திரன் கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கண்காணிப்பு கேமராவில் முகம் பதிவாகக்கூடாது என்று எல்லா திருடர்களும் விதவிதமாய் யோசித்து திருட்டில் ஈடுபடுவது போலீசாரை விழி பிதுங்க வைத்துள்ளது!

மாவட்ட செய்திகள்

Most Popular

ஈரோட்டில் +2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை

ஈரோடு ஈரோட்டில் 12ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு குமலன்குட்டை கணபதி நகரைச்...

சசிகலா விடுதலை குறித்து வரும் 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம்!

சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அதிமுக வருகிற 22 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளது. முதல்வர் இன்று டெல்லி பயணம் மேற்கொண்ட நிலையில் பாஜகவுடனான தொகுதி பங்கீடு பற்றி ஆலோசனை...

எம்ஜிஆர் பெயரை சொன்னால்தான் ஸ்டாலினால் அரசியல் செய்ய முடியும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

எம்ஜிஆர் பெயரை சொன்னால் தான் அரசியல் நடத்த முடியும் என்ற நிலைக்கு மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார் என அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில்...

எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு… சகாபுதீன் உள்பட இருவருக்கு, 5 நாள் போலீஸ் காவல்…

சென்னை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான சகாபுதீன் உள்ளிட்ட இருவரை 5 காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ-வுக்கு, சிறப்பு நீதிமன்றம் அனுமதி...
Do NOT follow this link or you will be banned from the site!