‘தன்பாலின ஈர்ப்பு’ காதலர்களின் ப்ரீ வெட்டிங் ஷூட்: வைரலாகும் போட்டோஸ்!

நெருக்கமாக இருக்கும்படி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஓரின சேர்க்கை குற்றமில்லை என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ஓரின பாலினத்தவர்கள் திருமணம் செய்து  கொள்ளும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.

ttn

அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரஹீம் மற்றும் நிவேத் அந்தோனி என்பவர்கள் தற்போது திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இதற்காக அவர்கள் ‘ப்ரீ வெட்டிங் ஷூட்’ வைத்தனர். அதில் இருவரும் நெருக்கமாக இருக்கும்படி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து கூறியுள்ள அவர்கள், தன்பாலின ஈர்ப்பினர் திருமணம் என்பது மற்ற இந்திய  திருமணங்கள் போல மிகவும் அழகானது.  இதை மக்கள்  உணரவேண்டும். நாங்கள் திருமணம் செய்துகொள்ள இருப்பதால் ப்ரீ வெட்டிங் ஷூட் வைத்தோம். அது இந்தளவுக்கு வைரலாகும்  என்பது எங்களுக்கு தெரியாது. எங்கள் திருமணத்திற்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனால் அவர்கள் எங்கள் திருமணத்திற்கு வரமாட்டார்கள். மற்றபடி அவர்களுக்கு எங்கள் மீது கோபம் இல்லை’ என்றனர். 

 

கடந்த செப்டம்பர் மாதம் முதன்முறையாக கேரளாவில்,  நிகேஷ் உஷா புஷ்கரன் மற்றும் சோனு ஆகியோர் திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

Most Popular

“தமிழுடனும், தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர்” : கமல் ஹாசன் புகழஞ்சலி!

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி எப்போதும் ஒரு அரசியல்வாதியாக, மக்கள் பிரதிநிதியாக, ஒரு கட்சியின் தலைவராக தன்னுடைய நிலைப்பாட்டில் எப்போதும் உறுதியுடன் இருந்தவர். தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவர்....

சண்டையால் பிரிந்து சென்றார்… குழந்தையை கொடுக்க மறுப்பு… காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்

கருத்து வேறுபாடால் பிரிந்து சென்ற காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள அக்கரைதத்தப்பள்ளி இந்திரா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்....

நெல்லையில் ரூ.1,000 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நடைபெறுகிறது :முதல்வர் பழனிசாமி பேச்சு

மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு நேற்று சென்ற முதல்வர் பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதே போல அம்மாவட்டங்களின் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் ஆய்வு...

லெபனான் குண்டுவெடிப்புக்கு மத்தியில் ஒரு மணமகள் -திருமண உடையில் ஓடும் திகிலூட்டும் காட்சி-சமூக ஊடகத்தில் வைரலான வீடியோ .

லெபனான்நாட்டின் பெய்ரூட்டில் அம்மோனியம் நைட்ரேட் கிடங்கு வெடித்ததில் குறைந்தது 135 பேர் இறந்தனர் 5,000 பேர் காயமடைந்துள்ளனர். சமூக ஊடகங்களில் வெளியான இந்த வெடிப்பின் திகிலூட்டும் காட்சிகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளன. இதனால்...