Home சினிமா தனுஷ் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

தனுஷ் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

நடிகர் தனுஷ் நடித்து வரும் அசுரன் படத்தில் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்து முடித்துவிட்டதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

சென்னை: நடிகர் தனுஷ் நடித்து வரும் அசுரன் படத்தில் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்து முடித்துவிட்டதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

‘வடசென்னை’, ‘மாரி 2’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துவருகிறார். மேலும் நடிகர் கருணாஸின் மகன் சிறிய வயது தனுஷ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

asuran

வெக்கை நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் இதில் பசுபதி மற்றும் இயக்குநர் பாலாஜி சக்திவேல் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்,’அசுரன் படத்திற்காக இரண்டு பாடல்களை முடித்துவிட்டதாகவும், அதில் ஒன்று சூப்பர் டான்ஸ் பாடல் என்றும், இந்த பாடலுக்காக காத்திருப்பவர்களுக்கு விரைவில் ஒரு ஆச்சரிய தகவல் உண்டு’ என்று கூறியுள்ளார். ஜி.வி.பிரகாஷின் இந்த பதிவால் தனுஷ் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: சூப்பர் டீலக்ஸ் பட சர்ச்சை: விஜய்சேதுபதியை உடனே கைது செய்ய வேண்டும்! 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

சசிகலாவுக்கு வைரஸ் பாதிப்பின் தன்மை குறைந்துள்ளது- மருத்துவமனை அறிக்கை

முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, பெங்களூருவிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனை காலம் முடிவடைந்ததால் அவர், சிறையிலிருந்து ஜனவரி மாதம் 27ஆம் தேதி...

வரும் 26ஆம் தேதி திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 26 ஆம் தேதி 12 மணிக்கு ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய...

32 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளோம்- முதல்வர் பழனிசாமி

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துறையாடலில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி,...

முதலீட்டாளர்களை ஏமாற்றிய இந்த வார பங்கு வர்த்தகம்.. 5 தினங்களில் சென்செக்ஸ் 156 புள்ளிகள் சரிவு..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. சென்செக்ஸ் 156 புள்ளிகள் குறைந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரத்தின்...
Do NOT follow this link or you will be banned from the site!