Home சினிமா ' தந்தை பெரியார் குறித்து அவதூறு' : ரஜினி மீது கோவை ஆணையர் அலுவலகத்தில் புகார்!

‘ தந்தை பெரியார் குறித்து அவதூறு’ : ரஜினி மீது கோவை ஆணையர் அலுவலகத்தில் புகார்!

அந்த சிலைகளுக்கு  செருப்பு மாலை போடப்பட்டது என்றும் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு  கிளம்பியுள்ளது. 

துக்ளக் பத்திரிக்கையின் 50- வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 14 ஆம் தேதி   நடைபெற்றது.  இந்த விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா  நாயுடு, நடிகர் ரஜினிகாந்த்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மோடி காணொளி மூலம் சோ குறித்து பேசினார்.

TTN

அப்போது பேசிய ரஜினிகாந்த், ‘ சோ மீது உள்ள மரியாதையால் தான் பிரதமர் துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இந்த விழாவில் பங்கேற்கின்றனர். முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என சொல்லிவிடலாம் ஆனால் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்’ என்றும் ‘பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது, அந்த சிலைகளுக்கு  செருப்பு மாலை போடப்பட்டது என்றும் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு  கிளம்பியுள்ளது. 

TTN

இந்நிலையில் கோவை திராவிடர் விடுதலைக் கழகம் தலைவர் நேருதாஸ் சார்பில் கோவை காவல்துறை ஆணையரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில்,’கடந்த 14ஆம் தேதி சென்னையில் நடந்த துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் 1971 ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணியில் ராமன் சீதை ஆகிய இடங்களில் நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்ற ஒரு பொய்யான தகவலைப் பரப்பி தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு  வதந்தியை பரப்பி பொது அமைதியைக் குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

 

மாவட்ட செய்திகள்

Most Popular

கீழ்பவானி கால்வாயில் மூழ்கி இளம்பெண் பலி… மாயமான தந்தையை தேடும் பணி தீவிரம்…

ஈரோடு பவானி அருகே கால்வாயில் குளித்த இளம்பெண் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், நீரில் மூழ்கிய அவரது தந்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று...

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 5 பேர் உயிரிழப்பு

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 11 கோடியே 40 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 25 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய...

தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பாஜக மீண்டும் பேச்சுவார்த்தை

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக தேர்தல் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது....

சென்னையில் போஸ்டர்கள், கொடிகளை அகற்றிய தேர்தல் அதிகாரி

சென்னையில் அனுமதி வழங்கப்பட்டுள்ள 196 இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம்...
TopTamilNews