Home தமிழகம் தந்தை நினைவாக இருந்த பைக் திருடு: மனஉளைச்சலில் இளைஞர் தற்கொலை!

தந்தை நினைவாக இருந்த பைக் திருடு: மனஉளைச்சலில் இளைஞர் தற்கொலை!

R15 பைக்கை  லட்சத்து 60 ஆயிரம் கொடுத்து வாங்கி கொடுத்துள்ளார்.  இதையடுத்து சில மாதங்களுக்கு பிறகு தியாகராஜன் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். 

தந்தை நினைவாக இருந்த பைக் திருடு: மனஉளைச்சலில் இளைஞர் தற்கொலை!

சென்னை புரசைவாக்கம் தாண்டவராயன் தெரு பகுதியில் வசித்து வருபவர் தியாகராஜன். 21 வயதான இவர் பள்ளிபடிப்பை முடித்துவிட்டு செல்போன் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார்.  நடுத்தர குடும்பமாக இருந்தாலும் தியாகராஜன் விரும்பியதை செய்து கொடுத்த அவரது தந்தை உயர் ரக R15 பைக்கை  லட்சத்து 60 ஆயிரம் கொடுத்து வாங்கி கொடுத்துள்ளார்.  இதையடுத்து சில மாதங்களுக்கு பிறகு தியாகராஜன் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். 

tt

தியாகராஜன்  தந்தை நினைவாக அந்த பைக்கை பாதுகாத்து வந்த நிலையில் கடந்த மாதம்  5 ஆம் தேதி வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த பைக் திருடு போனது. இதுகுறித்து வேப்பரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக பைக் கண்டுபிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

rr

இதனால் மன உளைச்சலில் இருந்த தியாகராஜன் நேற்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பரி போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி ராஜிவ்காந்தி மருத்துவனையில் பிரேத பரிசோனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஏற்கனவே பைக் தொலைந்து போன சில நாட்களிலேயே தியாகராஜன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தந்தை நினைவாக இருந்த பைக் திருடு: மனஉளைச்சலில் இளைஞர் தற்கொலை!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

எடப்பாடிக்கு நெருக்கமான அதிகாரிகளை வேறு இடத்திற்கு தூக்கியடித்த முதல்வர் ஸ்டாலின்!

நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக 159 இடங்களில் அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலே அதிகார மட்டத்திலும்...

“24 மணிநேரமும் மின்மயானத்தை பயன்படுத்த முடியாது” : சென்னை மாநகராட்சி ஆணையர்

அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து போராடினால் தான் கொரோனாவை வெல்ல முடியும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனாவால் மரணம்!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவை உலுக்கி எடுக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3.26 லட்சம் பேருக்கு பாதிப்பு உறுதியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. 3,890...

சோதனை மேல் சோதனை : ஸ்டாலின் அவசர ஆலோசனை!

டவ்தே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த...
- Advertisment -
TopTamilNews