Home உலகம் தந்தையர் தினத்துக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அளித்த பரிசு!

தந்தையர் தினத்துக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அளித்த பரிசு!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றும் தந்தை, மகன், மகள்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தது.

தந்தையர் தினத்தை முன்னிட்டு, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றும் தந்தை, மகன், மகள்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தது.

அன்னையர் தினம் எப்போதுமே பெரும் பரபரப்புக்கிடையே கொண்டாடப்பட்டு வருகிறது. அதைக் கொண்டாடி முடித்த கையுடன் ஜூன் மாதம் மற்றொரு முக்கிய தினம் வரும். குடும்பத்தில் இருக்கும் முக்கியமான நபரைச் சிறப்பிக்கும் நாள் அது. தந்தையர் தினம் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று வருவது வழக்கம். இவ்வாண்டு ஜூன் 16ஆம் தேதியன்று தந்தையர் தினம் வருகிறது. 

இதையொட்டி பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் உலகின் பல நாடுகளில், பல நேர வித்தியாசத்தில், பணியாற்றும் தந்தை மற்றும் மகன், மகள் பட்டியலை சேகரித்தது. அவர்களுக்கே தெரியாமல் ஹீத்ருவில் இருந்து சான் டியாகோ வரை பயணிக்கும் விமானத்துக்கான குழுவில் அவர்களை பணியமர்த்தியது. பணிக்கு வந்து பார்த்தப்போது அப்பாவுடன் பணியாற்றப்போவதை நினைத்து மகனும், மகனுடன் பணியாற்ற போகும் தந்தையும் நெகிழ்ச்சியடைந்தனர்.  செக் இன் கவுன்டர் முதல், வாடிக்கையாளர் சேவை, பைலட் என மொத்த குழுவுமே தந்தை மகன், அல்லது தந்தை மகளாகவே அமைந்தது. தங்கள் தந்தையின் பணியால் ஈர்க்கப்பட்டு, அதே பணியை தாங்களும் தேர்ந்தெடுத்த  மகள், மகன்களுக்கு இன்ப அதிர்ச்சிக்கொடுத்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். இதுபோன்று தந்தையும் மகள் அல்லது மகனும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைப்பது அரிதிலும் அரிதான விஷயமாகும்.
 

Most Popular

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதியை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்!

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை வேட்பாளராக்க வேண்டும் என எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் நினைவாக நலத்திட்ட உதவி வழங்கும்...

கொரோனா என்பது ‘வைரஸ்’ அல்ல..புதிய திருப்பம்

கொரோனா என்பது ‘வைரஸ்’ அல்ல..இதன் பின்னால் உலக அளவில் மோசடி நடந்திருப்பதாக இத்தாலிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, கோடிப் பேருக்கும் மேல் “கொரொனா” வைரஸ்...

பெரியார் சிலை அவமதிப்பில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை : ஓபிஎஸ் உறுதி!

பெரியார் சிலை அவமதிப்பில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் ஓபிஎஸ் உறுதியளித்துள்ளார். திருச்சி...

“உடைய கழட்டுங்க ,உறவு கொள்ளுங்க”-கள்ள காதலர்களை மிரட்டி படம் பிடித்த டுபாக்கூர் போலீஸ்

ஒருவர் தன்னை போலிஸ் என்று பொய் சொல்லி பல காதலர்களை மிரட்டி பலாத்காரம் மற்றும் ஆபாச வீடியோ எடுத்த விவகாரத்தில் சிக்கியுள்ளார்.உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் தேஹாட்டின் ரசூலாபாத் பகுதியில் உள்ள...
Do NOT follow this link or you will be banned from the site!