தங்க.தமிழ்ச்செல்வனால் விஸ்வரூபம் என்ன, மருதநாயகம்கூட‌ எடுக்க முடியாது – டிடிவி தமாஷ்!

“தங்க.தமிழ்ச்செல்வன் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க மாட்டார், என்னைப் பார்த்தால் பெட்டிப்பாம்பாய் அடங்கிவிடுவார்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இந்தப் பதிலில் “பெட்டிப் பாம்பாய்” என்ற வார்த்தைகளில் வரும் “பெட்டி”யில் ஏதோ உள்குத்து இருப்பதுபோல தெரிவது எனக்கு மட்டும்தானா?

அமமுகவில் அடுத்த 24 மணி நேரத்தில் அதிரடி உண்டு என்பதை முன்கூட்டியே கணித்திருந்தோம் அல்லவா? கணிப்பு மெய்யாகி, மெய் மெய்யப்பனாகிவிட்டோம். “என் மீது தவறு இருப்பதாக தினகரன் கருதினால் என்னை கட்சியில் இருந்து நீக்கட்டும்” என தங்கம் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்து புகைச்சல் உண்மை என்பதை உறுதிபடுத்திவிட்டார். முன்பாக, தினகரனின் உதவியாளருக்கு போன் போட்டு வண்டைவண்டையாக பேசியதும் வாசகர்களுக்கு நினைவிருக்கும்.

Thanga.TamilSelvan

சரி, பந்துவீசுபவரின் கையில் இருந்து பந்து விடுபட்டுவிட்டது. இப்போது பேட்ஸ்மேனின் முறை ஆயிற்றே? தினகரன் வாய்க்குள் மைக்கை விட்டு “தான் விஸ்வரூபம் எடுத்தால் அமமுக கட்சியே அழிந்துபோகும்” என தங்க.தமிழ்ச்செல்வன் கூறியிருக்கிறாரே என்று கேட்டிருக்கிறார்கள். தேர்தலில் ஜெயிப்பதில் மட்டும்தான் கொஞ்சம் சுணக்கம் இருக்கும் தினகரனிடம்.

Gift Box

இந்த பேட்டி, கேள்வி/பதில் எல்லாம் தண்ணி குடிப்பது மாதிரி. நிருபர்களின் கேள்விக்கு சிம்பிளா ஒரு பதிலைச் சொல்லிவிட்டு போய்விட்டார். அதாவது, “தங்க.தமிழ்ச்செல்வன் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க மாட்டார், என்னைப் பார்த்தால் பெட்டிப்பாம்பாய் அடங்கிவிடுவார்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இந்தப் பதிலில் “பெட்டிப் பாம்பாய்” என்ற வார்த்தைகளில் வரும் “பெட்டி”யில் ஏதோ உள்குத்து இருப்பதுபோல தெரிவது எனக்கு மட்டும்தானா? 

Most Popular

சட்டப்பிரிவு 370 ரத்து.. காஷ்மீர் வளர்ச்சிக்காக பல தசாப்தங்களாக இருந்த இருளை மோடி நீக்கினார்.. பியூஸ் கோயல்

ஜம்மு அண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்யப்பட்டு நேற்றோடு ஒராண்டு முடிவடைந்து விட்டது. அதனை முன்னிட்டு நேற்று, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் டிவிட்டரில், சமானிய மக்களுக்கு...

பாபர் மசூதி இடிப்பு, பால் தாக்கரே படத்துடன் சாமனா பத்திரிகையில் விளம்பரம்.. சர்ச்சையை கிளப்பிய சிவ சேனா..

பல இந்துக்களின் கனவான அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, நேற்று நிஜமானது. ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜைகளோடு நேற்று தொடங்கியது. இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்காததால் சிவ...

பாபர் மசூதி இருந்தது, உள்ளது மற்றும் இருக்கும்…. பரபரப்பை ஏற்படுத்திய அசாதுதீன் ஓவைசியின் டிவிட்

அயோத்தியில் நேற்று ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று சிறப்பாக நடந்தது. அதேசமயம் அந்த விழா நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஓவைசி டிவிட்டரில்...

ஜூன் காலாண்டில் ரூ.32 கோடி லாபம் ஈட்டிய மும்பை பங்குச் சந்தை..

நாட்டின் முன்னணி பங்குச் சந்தைகளில் ஒன்றான மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ.) தனது கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் மும்பை பங்குச் சந்தையின் நிகர லாபம்...