Home க்ரைம் தங்கையிடம் வம்பிழுத்த நபரை தட்டிக்கேட்ட அண்ணன் குத்திக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்!

தங்கையிடம் வம்பிழுத்த நபரை தட்டிக்கேட்ட அண்ணன் குத்திக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்!

அதுமிட்டுமில்லாமல் இந்த இரண்டு அணியினருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்குமாம்

நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம் அடுத்த கரட்டுபுதூர் கிராமத்தில் வசித்து வந்தவர் கெளதம் (23). இவரது தங்கை கௌசல்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த கோபி (24) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் ஆன நிலையில், தற்போது கௌசல்யா கர்ப்பமாக இருக்கிறார். வழக்கமாக அந்த ஊரில் அந்த கௌதம் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு அணியாகவும் அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு அணியாகவும் இருப்பார்களாம். அதுமிட்டுமில்லாமல் இந்த இரண்டு அணியினருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்குமாம். 

ttn

இந்நிலையில் நேற்று ராமச்சந்திரன் நேற்று கௌசல்யாவிடம் வம்பிழுத்ததால் ஆத்திரமடைந்த கௌதம், ரவிச்சந்திரனிடம் சண்டை போட்டுள்ளார். அவருடன் கோபியும் சென்றிருக்கிறார். ஏற்கனவே கௌதம் மீது கோபத்தில் இருந்த ரவிச்சந்திரன், இரண்டு பேரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். அதில் படுகாயம் அடைந்த கெளதம், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

ttn

மேலும், கோபி சிகிச்சைக்காக  நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

மாவட்ட செய்திகள்

Most Popular

தம்பதி அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

தென்காசி தென்காசி மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் தம்பதி அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த...

100 அடி உயரத்தில் போராட்டம் நடத்தும் குடும்பம்

100 அடி உயர நீர் தேக்க தொட்டியின் மேல் ஏறி நின்று ஒரு குடும்பமே போராடி வரும் விவகாரம் நெல்லை மாவத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விவசாய மசோதாக்கள்- கங்கையைப்போல தூய்மையான நோக்கம் கொண்டது – பிரதமர் வாக்குறுதி!

டெல்லியில் போராடும் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார். வேளாண் சட்டங்கள் குறித்து வதந்திகள் பரப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். வேளாண்மை சட்டங்கள் குறித்து அடிப்படை...

போதையில் ஆள்மாற்றி கொலை செய்த ஆசாமிகள்

ராமேஸ்வரம் துறைமுகம் பகுதியை சேர்ந்தவர்கள் முருகானந்தம்(39), சண்முகவேல்(40). இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இதனால் வேலுச்சாமியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Do NOT follow this link or you will be banned from the site!