ட்விட்டரில் சமூக பிரச்னைக்காக போர் தொடுக்கும் விஜய் ரசிகர்கள்!

அண்மையில் நடைபெற்ற பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், தேவையில்லாத விஷயங்களுக்கு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்வதைவிட்டுவிட்டு சமூக பிரச்னைகள் மீது கவனம் செலுத்தி ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யுங்கள் என அறிவுரை வழங்கியிருந்தார்.

அண்மையில் நடைபெற்ற பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், தேவையில்லாத விஷயங்களுக்கு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்வதைவிட்டுவிட்டு சமூக பிரச்னைகள் மீது கவனம் செலுத்தி ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யுங்கள் என அறிவுரை வழங்கியிருந்தார்.

trend

இதையடுத்து இன்று காலையிலிருந்து விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் #SaveTheniFromNEUTRINO என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதேபோல் கடந்த இரு தினங்களுக்கு முன் சுபஸ்ரீ இறப்புக்கு நீதிக்கேட்டு #JusticeForSubaShree என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து போர் புரிந்தனர். இதையடுத்து நேற்று #keezhadiதமிழ்civilization என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று #SaveTheniFromNEUTRINO என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துவருகின்றனர். 

vijay

தற்போது தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது. இத்திட்டத்திற்கு பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இருப்பினும் போராட்டங்களை புறம் தள்ளிய மத்திய அரசு நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்திவருவது குறிப்பிடதக்கது. 
 

Most Popular

மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல- ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

கேரள நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 28 பேர் ஆக அதிகரிப்பு

கேரளா: மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத்...

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்...

“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..

கேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில்,...