Home தமிழகம் டோல்கேட்டுக்கும் வேல்முருகனும் ஏழாம் பொருத்தம்...மீண்டும் வாக்குவாதம்; கைகலப்பு!

டோல்கேட்டுக்கும் வேல்முருகனும் ஏழாம் பொருத்தம்…மீண்டும் வாக்குவாதம்; கைகலப்பு!

டோல் கட்டணம் செலுத்துவதற்காக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், டோல்கேட்டில் செல்வதற்கான அனுமதி பெற்ற அட்டையை கார் ஓட்டுனர் காட்டியதாக தெரிகிறது

சென்னை: சுங்கச்சாவடி கட்டணம் தொடர்பான வாக்குவாதத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனின் கார் ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் தொழுப்பேடு சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனின் கார் கடந்த சென்ற போது, டோல் கட்டணம் செலுத்துவதற்காக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், டோல்கேட்டில் செல்வதற்கான அனுமதி பெற்ற அட்டையை கார் ஓட்டுனர் காட்டியதாக தெரிகிறது. இது தெரியாத வடமாநில ஊழியர்கள் கார் ஓட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக தெரிகிறது.

velmurugan

இதையடுத்து, காரில் இருந்து வேல்முருகன் இறங்கி வந்து தட்டி கேட்டதால் வடமாநில ஊழியர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சுங்கச்சாவடியில் வேல்முருகன் தர்ணாவில் ஈடுபட்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சுங்கச்சாவடி ஊழியர்கள் இருவரை கைது செய்தனர். மேலும், காவல்துறையினர் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையையடுத்து, வேல்முருகன் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.

இதனிடையே, அந்த சுங்கச்சாவடியை கடந்து சென்ற வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்றன. இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து பேட்டியளித்த காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ், ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில் ஊழியர்கள் இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

tollgate

முன்னதாக, கடந்த ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமையாததைக் கண்டித்தும், சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை எதிர்த்தும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள், டோல்கேட் கட்டணம் செலுத்த மறுத்து சுங்கச்சாவடியை சூறையாடினர். அது தொடர்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க 

கணவருடன் கடற்கரையில் ரொமான்ஸ் செய்யும் பிரியங்கா சோப்ரா! வைரலாகும் புகைப்படங்கள்!

மாவட்ட செய்திகள்

Most Popular

“2006 தேர்தலில் 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்படும் என்ற திமுகவின் அறிவிப்பு என்ன ஆனது?”

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, “அதிமுக இணைய வேண்டும் என்பது குருமூர்த்தி கருத்து, அதிமுக தனித்தன்மையுடன் இருக்கிறது. யார்...

சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைத்துக்கொள்வது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்- புகழேந்தி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி அவரது இல்லத்திற்கு வருகை தந்தார்.

தமிழகத்தில் மேலும் 621 பேருக்கு கொரோனா, 5பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 9கோடியே 32 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 20 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு...

பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 மாடுகளை பிடித்த கார்த்திக்-க்கு கார்! அரசுவேலை வழங்க கோரிக்கை

இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 மாடுகளை பிடித்த கருப்பாயூரணி கார்த்திக் முதல் பரிசாக...
Do NOT follow this link or you will be banned from the site!