டொனால்ட் டிரம்ப் – கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தை தோல்வி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே வியட்நாமில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது

ஹனாய்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே வியட்நாமில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி, தொடர் ஏவுகணை சோதனைகள், ஹைட்ரஜன் குண்டு சோதனை என அதிர வைத்து வந்த வடகொரியா மீது, ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.

இதனிடையே, தன்னுடைய நிலைபாட்டை மாற்றி இணக்கமான போக்கை கடைபிடிக்க ஆரம்பித்தது வடகொரியா. சீன அதிபர், தென் கொரியாவின் மூன் ஜே-இன் உடனான வடகொரிய அதிபரின் சந்திப்பு பெரிதும் பேசப்பட்டது.

அதேபோல், ஒருவரை ஒருவர் அழித்து விடுவோம் என மிரட்டல் விடுத்தது வந்த வடகொரியா-அமெரிக்கா இடையே, சீனா, தென் கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக சமரசம் ஏற்பட்டது. இதையடுத்து, இரு நாட்டு அதிபர்கள் இடையேயான வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு கடந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது. அமெரிக்க டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என கிம் ஜாங் உன்-ம், கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு என்பது அமெரிக்க வரலாற்றில் மாபெரும் வெற்றி என அமெரிக்க அதிபரும் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான இரண்டாவது சந்திப்பு வியட்நாமின் ஹனாய் நகரில் நடைபெற்றது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த உச்சி மாநாட்டின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. வடகொரியா மற்றும் அமெரிக்காவின் இருநாட்டுத் தலைவர்கள் இணைந்து ஒன்றாக மதிய உணவு சாப்பிடுவது, கூட்டறிக்கை விடுவதாக இருந்தது. ஆனால், அந்த திட்டமும் திடீரென கைவிடப்பட்டது.

இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமானது. அணு ஆயுதங்களை அழித்தல், பொருளாதாரம் ஆகியவற்றை முன்னெடுக்கப் பல வழிகள் குறித்துப் பேசினோம். எந்த ஒப்பந்தமும் இந்தச் சந்திப்பில் எட்டப்படவில்லை. இரு நாடுகளும் எதிர்காலத்தில் சந்திக்கும் என வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரிய அதிபர் அந்நாட்டில் செயல்பட்டு வரும் சில அணு தளங்களை மட்டுமே மூட முடியும், அனைத்தையும் மூட முடியாது என தெரிவித்துள்ளார். ஆனால், அனைத்து சர்வதேச தடைகளையும் நீக்க வேண்டும் என விரும்புவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Most Popular

மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல- ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

கேரள நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 28 பேர் ஆக அதிகரிப்பு

கேரளா: மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத்...

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்...

“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..

கேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில்,...