டெல்லி வன்முறை: உளவுத்துறையின் தோல்வியே காரணம்- ரஜினிகாந்த்

சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம். டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம். டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன். குடியுரிமை திருத்த சட்டம் திரும்பப்பெறப்படும் என்ற நம்பிக்கை இல்லை. மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்ப பெறாது. டெல்லி போராட்டத்திற்காக மத்திய அரசை கண்டிக்கிறேன். அமைதி வழியில் போராட்டம் நடத்தலாம் ஆனால்  போராட்டம் நடத்தக்கூடாது. 

ரஜினி

ட்ரம்ப் போன்ற தலைவர் டெல்லி வந்திருக்கும் சமயத்தில் மத்திய அரசு போராட்டத்தை கட்டுப்படுத்தியிருக்கலாம். குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியார்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கே நிற்பேன்.சில கட்சிகள் மதத்தை வைத்து தூண்டிவிடுகிறார்கள் இது சரியான போக்கு கிடையாது. இதனை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் வருங்காலத்தில் பெரிய பிரச்சனையாகிவிடும்” எனக் கூறினார்

Most Popular

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை...

’இந்த லிஸ்ட்டில் நானா?’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை!

ஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு...

கொரோனா காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி மனு!

நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு...

“வாஷிங் மெஷின் போல ஏடிஎம் மெஷினை அடிக்கடி தூக்கி செல்லும் கூட்டம் ” -இந்நிலை நீடித்தால் இனி ஏடிஎம் மெஷின்ல காசுக்கு பதில் காத்துதான் வரும்.

தென்மேற்கு டெல்லியில் உள்ள ராஜோக்ரி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒரு ஏடிஎம் மெஷினை அடையாளம் தெரியாத இருவர் தூக்கி சென்றனர் .அந்த மெஷினில் மொத்தம் 18 லட்ச ரூபாய் பணம்...