Home அரசியல் டெல்லி குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் மேற்கு வங்கத்துக்கு நோ.... மம்தாவுக்கு செக் வைத்த மத்திய அரசு

டெல்லி குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் மேற்கு வங்கத்துக்கு நோ…. மம்தாவுக்கு செக் வைத்த மத்திய அரசு

குடியரசு தினத்தில் தலைநகர் டெல்லியில் நடைபெறும் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் மேற்கு வங்கம் இடம் பெறாது என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக மம்தா அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதே இதற்கு காரணம் என பரவலாக கருத்து பரவி வருகிறது

ஆண்டு தோறும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் அன்று நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் மாநிலங்களின் கலாச்சாரங்களை விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெறும். இந்த அணிவகுப்பில் இடம்பெறுவது என்பது சாதரணம் அல்ல.

அலங்கார ஊர்திகள்

மாநில அரசுகளின் அலங்கார ஊர்தியின் வடிவமைப்பு, தீம், கரு, அதன் காட்சி தாக்கம் உள்ளிட்டவை நிபுணர்கள் அடங்கிய ஆய்வு கமிட்டி ஆய்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். பின் அதிலிருந்து குடியரசு தின பேரணியில் இடம்பெறும் மாநிலங்களின் அலங்கார ஊர்தி பட்டியல் தயாரிக்கப்படும். இந்த ஆண்டு குடியரசு தின விழா பேரணியில் பங்கேற்க இருக்கும் அலங்கார ஊர்திகள் குறித்து பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:

மம்தா பானர்ஜி

இந்த ஆண்டு குடியரசு தின பேரணியில் அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது தொடர்பாக 32 மாநிலங்கள் மற்றும் யூனியன், 24 அமைச்சகங்களிலிருந்து  மொத்தம் 56 கோரிக்கைகள் வந்தன. அதில் 22 விண்ணப்பங்கள் மட்டும் இறுதி  செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த இறுதி பட்டியலில் மேற்கு வங்கம் இடம் பெறவில்லை. குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதே இதற்கு காரணம் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

பூட்டிய வீட்டில் திருடியவரை, அயர்லாந்தில் இருந்து பிடித்துக்கொடுத்த உரிமையாளர்

சென்னை போரூர் அருகே பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்த நபரை, அயர்லாந்தில் இருந்த உறவினர் சிசிடிவி கேமரா மூலம் போலீசில் பிடித்துக் கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

’ஊசிகளை இப்போதே வாங்கி வருகிறோம்’ கொரோனா தடுப்பு பணிகளில் யுனிசெப்

கொரோனா நோய்ப் பரவலின் வேகம் உலகையே அச்சுறுத்தி வருகிறது. சில நாட்களாக அமெரிக்காவில் புதிய நோய்த் தொற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும அதிகரித்து வருகிறது.

“அனைத்து காவல் நண்பர்களின் உன்னத தியாகத்தை நினைவு கூறுகிறேன்” – முதல்வர் பதிவு!

காவலர் வீரவணக்க தினத்தையொட்டி, முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வீர தீர செயல்களை புரிந்து, பணியில் உயிர் நீத்த காவலர்களை போற்றும் விதமாக...

‘அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்’ : மு.க.ஸ்டாலின்

7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்புக்கு...
Do NOT follow this link or you will be banned from the site!