Home விளையாட்டு கிரிக்கெட் டெல்லியை வீழ்த்தி த்ரில் வெற்றி - புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

டெல்லியை வீழ்த்தி த்ரில் வெற்றி – புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

நேற்று இரவு நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையான ஐபிஎல் போட்டியில் வென்றதன் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது.

நேற்று இரவு நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையான ஐபிஎல் போட்டியில் வென்றதன் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது.

டாஸ் வென்ற டெல்லி அணி

ஐபிஎல் 12வது சீசன் கிரிக்கெட் தொடர் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசன் ஐபிஎல் தொடரின் ஐந்தாவது லீக் போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின.

ஐபில்

இந்த இரு அணிகளும் தங்களின் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி விளையாடிய டெல்லி அணியில் தொடக்க வீரர்கள் ஷிகார் தவண் மற்றும் பிரித்திவ் ஷா இருவரும் களம் இறங்கினர். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 147 ரன்கள் எடுத்தது.

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி 

​அடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் அம்பத்தி ராய்டு இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அம்பத்தி ராய்டு 5 ரன்னில் இஷாந்த் சர்மா பந்தில் அவுட் ஆகினார். வாட்சன் மற்றும் ரெய்னா ஆட்டமிழந்து வெளியேற, கேதார் ஜாதவ் மற்றும் தோனி இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.

ipl points table

இருவரின் விக்கெட்களை வீழ்த்த முடியாமல் டெல்லி அணி வீரர்கள் தடுமாறினர். தோனி மற்றும் கேதார் ஜாதவ் நிலைத்து நின்று சென்னை அணியின் வெற்றிக்கு உதவினர். கேதார் ஜாதவ் 27 ரன்னில் கடைசி ஓவரில் ராபாடா பந்தில் அவுட் ஆக, கடைசி ஓவரில்  திரில் வெற்றி பெற்றுள்ளது சென்னை அணி. 

இந்த வெற்றி மூலம் சென்னை அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இதையும் படிங்க 

பாஜக – வில் இணைந்த அதிரடி கிரிக்கெட் வீரர் – டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்

கிரிக்கெட் மட்டுமா டென்னிஸ் போட்டியிலும் மாஸ் காட்டிய ‘தல’ தோனி: ரசிகர்கள் ஆச்சரியம்!

 

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews