Home விளையாட்டு கிரிக்கெட் டெல்லியை வீழ்த்திய சூட்சமத்தை கட்டவிழ்த்த 'தல' தோனி: மும்பையை பழி தீர்க்குமா ?

டெல்லியை வீழ்த்திய சூட்சமத்தை கட்டவிழ்த்த ‘தல’ தோனி: மும்பையை பழி தீர்க்குமா ?

டெல்லி அணியை வீழ்த்தியது மூலம் இறுதிப் போட்டிக்குள் சென்னை அணி நுழைந்துள்ளது.

விசாகப்பட்டினம்:  டெல்லி அணியை வீழ்த்தியது மூலம் இறுதிப் போட்டிக்குள் சென்னை அணி நுழைந்துள்ளது.

csk

ஐபிஎல் இரண்டாவது தகுதிச் சுற்று போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. விசாகப்பட்டினத்தில்  நேற்று நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்கத்திலேயே தடுமாறிய டெல்லி அணி சென்னை அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறியது. இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது.

csk

இதனையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் பிளிசியஸ், ஷேன் வாட்சன்  இருவரும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ரெய்னா 11 ரன்களிலும்  தோனி 9 ரன்களிலும்  ஆட்டமிழக்க பிராவோ களமிறங்கி பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார்.

csk

இதனால் இறுதியில்  சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 19 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் சென்னை மும்பையுடன் மோதவுள்ளது. முன்னதாக மும்பையை எதிர்கொண்ட 3 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. 

dhoni

போட்டிக்குப் பின் பேசிய கேப்டன் தோனி, ‘7.30 மணிக்கே ஆட்டம் தொடங்குகிறது என்பதால் மைதானம் சற்று ஈரப்பதமாக இருக்கும். அதனால் அதிக ரன்களை எடுக்க முடியாது. அதே சமயம் சுழற்பந்து வீச்சாளர்களால் இது போன்ற மைதானத்தில் சிறப்பாக அட முடியும் என்பதால் அவர்களை அதிகம் பயன்படுத்தினோம். அதே போல் டெல்லி அணியில்  இடக்கை ஆட்டக்காரர்கள் அதிகம் இருந்தனர். அதற்காகத் தான் இடக்கை பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினோம். சென்னை அணி இறுதிப்போட்டிக்குச் செல்லும் வழக்கமான பாதை இது தான். கடந்த ஆண்டு மட்டுமே கொஞ்சம் மாற்றம்’ என்று தெரிவித்தார் 

மாவட்ட செய்திகள்

Most Popular

அழகான இளம்பெண்களை மட்டும் தேர்வு செய்து… அமைச்சர் தொகுதியில் அரங்கேறும் அடாவடி

இறைபணி என்ற பெயரில் சில முக்கிய கோயில்களுக்கு சிறுமிகளை பொட்டுக்கட்டிவிடும் தேவதாசி முறை ஒருகாலத்தில் இருந்தது. அது இப்போதும் இருப்பது அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது. ஆரம்ப...

“திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓராண்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள்” – ஆட்சியர் சிவன்அருள்

திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் சிவன்அருள் தெரிவித்தார்.

தடுப்புச் சுவர் மீது கார் மோதி விபத்து : இளைஞர் பரிதாப பலி!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் வசித்து வரும் இப்ராஹீம் என்பவரின் மகன் ரகுமான்(36). இவர் நேற்று இரவு காரில் விருது நகரை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அருப்புக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை...

வைகை ஆற்றில் மிதந்த விஷ நுரை; பாலத்தை தாண்டி வெளியே வந்ததால் வாகன ஓட்டிகள் அவதி!

வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளநீருடன் வெண்மை நிறத்தில் விஷ நுரையும் கலந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கக்...
Do NOT follow this link or you will be banned from the site!