Home தமிழகம் டெல்டா பாசனத்திற்காக கல்லணை திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

டெல்டா பாசனத்திற்காக கல்லணை திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி

கர்நாடக அணைகளில் இருந்து நொடிக்கு 26 ஆயிரத்து 875 கன அடி வீதம் காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது. பிலிகுண்டுலுவை வந்தடையும் நீரின் அளவு 25 ஆயிரம் கன அடியாகவும், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 19 ஆயிரம் கன அடியாகவும் உள்ளது. மேட்டூர்  அணையின் நீர்மட்டம் தற்போது 112.49 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பானது 81.99 டிஎம்சி யாக இருக்கிறது.

டெல்டா பாசனத்திற்காக கல்லணை திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

கர்நாடக அணைகளில் இருந்து நொடிக்கு 26 ஆயிரத்து 875 கன அடி வீதம் காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது. பிலிகுண்டுலுவை வந்தடையும் நீரின் அளவு 25 ஆயிரம் கன அடியாகவும், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 19 ஆயிரம் கன அடியாகவும் உள்ளது.

kaveri

மேட்டூர்  அணையின் நீர்மட்டம் தற்போது 112.49 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பானது 81.99 டிஎம்சி யாக இருக்கிறது. அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரானது, கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை, திருச்சி முக்கொம்பு அணையைக் கடந்து நேற்று தஞ்சை மாவட்டம் கல்லணையை அடைந்தது. இந்நிலையில், இன்று கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ், ஓ.எஸ். மணியன், சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராசன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு மதகுகளை திறந்து வைத்தனர். தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். வெளியேற்றப்பட்ட நீரில் மலர் மற்றும் நெல் மணிகளை தூவி விவசாயிகள் வரவேற்றனர்.

cavery river

காவிரி, வெள்ளாறு, கொள்ளிடம் ஆறுகளில் தலா ஆயிரம் கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 500 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் நீர் திறப்பு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது. கல்லணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள நீரால், 12 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

டெல்டா பாசனத்திற்காக கல்லணை திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

எங்கள கேக்காம திருவிழா நடத்துறீங்களோ… பட்டியலின மக்களை காலில் விழவைத்த ஊர்மக்கள்!

சாதி மதம் இனம் கடந்து மக்கள் சகஜமாக ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகி வரும் இக்காலகட்டத்தில் கூட, தமிழகத்தின் பல இடங்களில் இன்னமும் பட்டியலின மக்கள் அவமதிக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி...

மோடிக்கு கடிதம் எழுதிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி!

தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை அதிகரித்து வழங்க வேண்டுமென பிரதமர் மோடி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை எதிர்பாராத...

5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்கும் தமிழ்நாடு அரசு!

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை அறிவியலாளர்களும் ஆட்சியாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை...

கொரோனாவால் இறந்த மூதாட்டி : தகனம் செய்வதற்கு முன் எழுந்ததால் அதிர்ச்சி!

கொரோனா தொற்றால் இறந்ததாக மூதாட்டி ஒருவரை தகனம் செய்ய சென்ற போது எழுந்து உட்கார்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisment -
TopTamilNews