Home விளையாட்டு கிரிக்கெட் டி20 உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் – இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா உற்சாக நடனம்: வைரல் வீடியோ

டி20 உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் – இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா உற்சாக நடனம்: வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா உற்சாக நடனம் ஆடிய வீடியோவை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா உற்சாக நடனம் ஆடிய வீடியோவை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவையும், அடுத்த போட்டியில் வங்காளதேச அணியையும் வீழ்த்தியது. நேற்று நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதைத் தொடர்ந்து, இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகுஸ், ஒரு பெண் பாதுகாப்பு அதிகாரியுடன் இணைந்து உற்சாகமாக நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோவை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. இதனால் அந்த வீடியோ பலரால் உடனடியாக வைரலாக பகிரப்பட்டது. இந்த நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தனது அடுத்த லீக் போட்டியில் இலங்கையை நாளை எதிர்கொள்கிறது.

Most Popular

எஸ்பிபியின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்: பழனிசாமி

50 நாட்களுக்கு மேலாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 75. 55 ஆண்டுகள் திரை இசையில் சுமார் 40...

கதாநாயகனாக நடிக்க மறுத்த எஸ்.பி.பி – 285 நாட்கள் ஓடிய ’கேளடி கண்மணி’

இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக இருந்த வசந்த், தனது முதல் படமாக 1990 கேளடி கண்மணி படத்தை தொடங்கினார். அந்த படத்தின் கதாநாயகன் எஸ்.பி.பி.புதுமுக இயக்குநர்கள் ஹீரோக்களை வைத்து கதை...

ஐபிஎல் இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணி வீரர்கள் கருப்பு நிற பேண்ட் அணிந்து பங்கேற்பு!

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு பலம் வாய்ந்த மும்பை இண்டியன்ஸ் மோதியது. அம்பத்தி ராயுடு நின்று அடித்து சென்னையை வெல்ல வைத்தார். சென்னை சூப்பர் கிங்ஸின் இரண்டாம்...

பூரி கடற்கரையில் எஸ்.பி.பிக்கு மணல் சிற்பம்

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அவரது ரசிகர்கள் பல்வேறு வகையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேடை இசைக்கலைஞர்கள் இசைநிகழ்ச்சியின் மூலம் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கோவையை குனியமுத்தூர்...
Do NOT follow this link or you will be banned from the site!