Home சினிமா டிவிட்டர் டிரெண்டிங்கில் மாஸ் காட்டும் 'தளபதி 64 ஃபஸ்ட்லுக்'

டிவிட்டர் டிரெண்டிங்கில் மாஸ் காட்டும் ‘தளபதி 64 ஃபஸ்ட்லுக்’

மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர்

பிகில்  திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர் .

ttn

இப்படத்தின் இரண்டு கட்ட  படப்பிடிப்பு டெல்லி, சென்னையில் நடைபெற்ற நிலையில், மூன்றாம்  கட்டப்படப்பிடிப்பு கர்நாடகா ஹிமோகாவில் பெரிய சிறைச்சாலை போன்று செட் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அங்கு விஜய் சேதுபதி மற்றும் விஜய்க்கான காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. 

இதனிடையே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், தளபதி 64 படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று  அறிவித்து விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தினார். 

ttn

இந்நிலையில்  #Thalapathy64FLday என்ற ஹேஸ்டேக் இணையத்தில் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. மாநகரம், கைதி போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த  லோகேஷ் கனகராஜின் அடுத்த படமான தளபதி 64 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது எனலாம். 

மாவட்ட செய்திகள்

Most Popular

சசிகலாவுக்கு எதிராக சதி; உண்மையில் ஜெயலலிதா இறந்தது இந்த தேதியில் தான் – திவாகரன்

முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையுமான ஜெயலலிதா, 5 முறை தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக்...

மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியர், 9 ஆண்டுகளுக்கு பின் கைது

கோவையில் பள்ளி மாணவிக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியரை, 9 ஆண்டுகளுக்கு பிறகு போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். கோவை குனியமுத்தூரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி...

மூன்று மொழிகளில் LPL தொடர் தீம் பாடல்!

இந்தியாவில் வெற்றிகரமாக நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகள் பல நாடுகளையும் அவ்வாறு நடத்த தூண்டியுள்ளன. ரசிகர்கள் அதிகரிப்பது ஒருபக்கம், அதன் மூலம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கிறது.

234 தொகுதிகளிலும் ரஜினியின் ஆன்மீக அரசியல் வெல்லும்: அர்ஜூன் சம்பத்

தேவர் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் தேவரின் நினைவிடத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தேவரின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து...
Do NOT follow this link or you will be banned from the site!