Home தொழில்நுட்பம் டிராயிடம் குட்டு வாங்கிய டெலிகாம் நிறுவனங்கள் - புது கட்டுப்பாடு விதிப்பு

டிராயிடம் குட்டு வாங்கிய டெலிகாம் நிறுவனங்கள் – புது கட்டுப்பாடு விதிப்பு

முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கு டிராய் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.

டிராயிடம் குட்டு வாங்கிய டெலிகாம் நிறுவனங்கள் - புது கட்டுப்பாடு விதிப்பு

மும்பை: முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கு டிராய் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்தியாவில் டெலிகாம் சேவையை பயன்படுத்தும் பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் போதுமான பேலன்ஸ் வைத்திருக்கவில்லை என்றாலும் அவர்களது இணைப்பினை துண்டிக்கக்கூடாது என மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக பல்வேறு டெலிகாம் நிறுவனங்களும் போதிய பேலன்ஸ் வைத்திருக்காத வாடிக்கையாளர்களின் இன்கமிங் அழைப்புகள் துண்டிக்கப்படும் என குறுந்தகவல் அனுப்பி வந்தன. இதைத் தொடர்ந்து மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வாடிக்கையாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகமாக அனுப்பப்பட்டன.

பல வாடிக்கையாளர்கள் தாங்கள் போதுமான பேலென்ஸ் வைத்திருந்தாலும், டெலிகாம் நிறுவனங்கள் அதிகளவு குறுந்தகவல்களை அனுப்பி ரீசார்ஜ் செய்யக் கோருவதாக தெரிவித்திருந்தனர். இவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் டிராய் புதிய உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

அதன்படி டெலிகாம் நிறுவனங்கள் போதுமான பேலென்ஸ் வைத்திருக்காத வாடிக்கையாளர்களின் இன்கமிங் அழைப்புகளை துண்டிக்கக்கூடாது என தெரிவித்துள்ளது.

இதேபோன்று வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் வைத்திருக்கும் சரியான பேலென்ஸ் தொகை, அதன் சரியான வேலிடிட்டி தேதி உள்ளிட்டவற்றை தெளிவாக அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் இதனுடன் குறுந்தபட்ச ரீசார்ஜ் தொகையை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என டிராய் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற அனைத்து விவரங்களும் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) மூலம் 72 மணி நேரத்திற்குள் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகையை தங்களது பிரீபெயிட் அக்கவுன்ட்டில் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் இணைப்பை துண்டிக்கக்கூடாது என்றும் டிராய் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிராயிடம் குட்டு வாங்கிய டெலிகாம் நிறுவனங்கள் - புது கட்டுப்பாடு விதிப்பு
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கொரோனாவால் இறந்த மூதாட்டி : தகனம் செய்வதற்கு முன் எழுந்ததால் அதிர்ச்சி!

கொரோனா தொற்றால் இறந்ததாக மூதாட்டி ஒருவரை தகனம் செய்ய சென்ற போது எழுந்து உட்கார்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நிவாரண நிதி வழங்கிய ராஜீவ் காந்தி கொலையில் கைதாகிய ரவிச்சந்திரன்!

கொரோனா தடுப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தும் வகையில் கொரோனா நிவாரண நிதி திட்டத்தை உருவாக்கியுள்ளது தமிழ்நாடு அரசு. இந்த முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் பொதுமக்களின் பங்களிப்பை வழங்கும்படி அரசு கோரிக்கை...

கொரோனாவில் இருந்து மீண்டாலும் புதிய நோய்த்தொற்று அபாயம்… பகீர் கிளப்பும் சுகாதாரத்துறை செயலர்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் சூழலில், கடந்த சில நாட்களாக கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா மூன்றாம்...

அடுத்த வாரம் அறிமுகமாகிறது தண்ணீரில் கலந்துகுடிக்கும் கொரோனா மருந்து!

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடிவருகிறது. கடந்த வாரம் முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டிச் சென்றது. தற்போது பல்வேறு மாநிலங்களில் முழு...
- Advertisment -
TopTamilNews