Home அரசியல் டிடிவி தினகரனை கண்டு மெர்சலாகும் திமுக? - வீடியோ

டிடிவி தினகரனை கண்டு மெர்சலாகும் திமுக? – வீடியோ

டிடிவி தினகரனுக்கு இணையாக நாமும் கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுகவை சேர்ந்த கே.என்.நேரு பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சென்னை: டிடிவி தினகரனுக்கு இணையாக நாமும் கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுகவை சேர்ந்த கே.என்.நேரு பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் ஒதுக்கப்பட்ட பிறகு அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். கட்சி தொடங்கியதிலிருந்து தமிழக அரசு மீது காத்திரமான விமர்சனத்தை முன்வைத்து வரும் அவர், இந்த ஆட்சி விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும் எனவும் எங்களது ஸ்லீப்பர் செல்கள் அங்கிருக்கிறார்கள் எனவும் கூறி வருகிறார். 

karan

மேலும், டிடிவி தினகரன் எங்கு சென்றாலும் அவரை சுற்றி ஏராளமான தொண்டர்கள் செல்கின்றனர். அதுமட்டுமின்றி தங்களிடம் முகம் கோணாமல் தினகரன் நடந்து கொள்கிறார் எனவும்  அவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் சமீபகாலமாக அவரது கட்சி காலியாகி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியானாலும் அதை அவரும், அவரது தொண்டர்களும் மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், திமுகவின் திருச்சி மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு பேரறிஞர் அண்ணா பிறந்தநாளின்போது தனது கட்சி நிர்வாகிகளிடம் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கே.என்.நேரு, அண்ணா பிறந்தநாளின் போது மாலை போட அனைவரும் வந்துவிடுங்கள். ஏன்னா திமுகல  போட்டா 100, 200 பேரு போடுவாங்க. அதிமுகல போட்டா 100, 200 பேர் போடுவாங்க, மதிமுகல போட்டா 40, 50 பேர் போடுவாங்க. ஆனா தினகரன் என்ன பண்றார்னா, மாலை போடுறேனு விளம்பரம் பண்ணி 1000 பேர கூட்டிடுவாரு. அதனால அவருக்கு சரிசமமா நாமளும் இருந்தாதான் திமுகவுக்கு மரியாதையா இருக்கும் என பேசியிருக்கிறார்.

இந்த வீடியோவை கண்ட தினகரன் ஆதரவாளர்கள், டிடிவி தினகரனை கண்டு திமுக மிரளுகிறது என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது என கூறி இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

பிரதமர் மோடிக்கு காகித ராக்கெட் விட்டு விவசாயிகள் நூதன போராட்டம்

திருச்சி மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, திருச்சியில் விவசாயிகள் ராக்கெட் விட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு,...

ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி இருளர் இன மக்கள் மனு

திருப்பத்தூர் திருப்பத்தூரில் குரும்பர் இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி 500-க்கும் மேற்பட்டவர்கள், சார் ஆட்சியரிடம் வழங்கினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சத்திற்கும்...

7.5% உள்ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு!

7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்கு ரூ.16 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. தமிழகத்தில் அரசு...

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது இன்று காலை தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே ஏறக்குறைய 975 கி.மீ தூரத்தில்...
Do NOT follow this link or you will be banned from the site!