Home க்ரைம் டிக் டோக் பிரபலம் சுட்டுக்கொலை: ரகசிய அறையில் இருந்த குற்றவாளி கைது!?

டிக் டோக் பிரபலம் சுட்டுக்கொலை: ரகசிய அறையில் இருந்த குற்றவாளி கைது!?

டிக் டோக்  பிரபலமான மொஹித்  கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

புதுடெல்லி:  டிக் டோக் பிரபலமான மொஹித்  கொல்லப்பட்ட வழக்கில்  குற்றவாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

mohit

டிக் டோக்கில் மிகவும் பிரபலமாக வலம் வந்தவர்  மொஹித். ஜிம் டிரைனரான இவர் உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து  வந்துள்ளார். இதனால் இவரை ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.  கடந்த 21 ஆம் தேதி  ஜிம் அருகே உள்ள  கடையில் நின்றிருந்த மொஹித்தை  மர்மநபர்கள் மூவர் சுட்டுக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இந்த கொலை சம்பந்தமான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவானது. அதில் கொலையாளிகள் ஹெல்மெட் அணிந்திருந்தது  தெரியவந்தது. 

police

இந்நிலையில் மொஹித் கொலை வழக்கில் சந்தீப் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மொஹித்துடன்  ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாக கூலிப்படையை வைத்து மொஹித்தை  அவர் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

police

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ரகசியமாக சந்தீப் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். அப்போது அவர் ரகசிய அறையில், வெளியுலக தொடர்பு ஏதும் இல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் அவர் செல்போனையும் பயன்படுத்தாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீதான சந்தேகம் தீவிரம் அடைந்த நிலையில் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

முன்னதாக கைதான சந்தீப் மீது 5ற்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக  போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

Most Popular

நான் சில அமைச்சரா அல்லது சிறந்த எதிர்க்கட்சி தலைவரா? காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த பாலிவுட் நடிகை

பஞ்சாப் காங்கிரசார் தனது உருவ பொம்மையை எரித்தற்கு, நான் சில அமைச்சரா அல்லது சிறந்த எதிர்க்கட்சி தலைவரா? என்று அவர்களுக்கு நடிகை கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்துள்ளார்.

மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான மசோதா கொண்டு வர வேண்டும்.. மத்திய அரசுக்கு நிஷிகாந்த் துபே வேண்டுகோள்

பொது சிவில் சட்டம், மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான மசோதாக்களை கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே வேண்டுகோள் விடுத்தார்.

விவசாயிகளின் வங்கி கணக்கில் 2 தவணைகளாக மொத்தம் ரூ.4 ஆயிரம் பணப் பரிமாற்றம்… மத்திய பிரதேச அரசு

பி.எம். கிசான் திட்டத்தின்கீழ், விவசாயிகளின் வங்கி கணக்கில் 2 தவணைகளாக மொத்தம் ரூ.4 ஆயிரம் நேரடி பண பரிமாற்றம் செய்யப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.

ஷாலிமார் பெயிண்ட்ஸ் நஷ்டம் ரூ.10 கோடியை தாண்டியது

ஷாலிமார் பெயிண்ட்ஸ் நிறுவனம் 2020 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.10.61 கோடியை நிகர நஷ்டமாக சந்தித்துள்ளது. ஷாலிமார் பெயிண்ட்ஸ் நிறுவனம் கடந்த ஜூன்...
Do NOT follow this link or you will be banned from the site!