டிக் டோக்கில் சாகசம் செய்த இளைஞர் உயிரிழப்பு: கதறும் பெற்றோர்!

முதுகெலும்புதான் உடலுறுப்புகளின் செயல்பாட்டுக்கு முக்கிய காரணி. அதனால் அவர் எதிர்காலமே கேள்விக்குறியாகும்

கர்நாடகா: டிக் டோக் செயலிக்காக  பேக்பிலிப் எனப்படும் பின்புறமாகக் குதித்தலில் ஈடுபட்டு  முதுகெலும்பு முறிந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

tiktok

கர்நாடகாவின் துமகூரு பகுதியைச் சேர்ந்த இளைஞர் குமார். 19 வயதான இவர் டிக் டோக்கில் கடந்த 18 ஆம் தேதி வீடியோ பதிவிட நண்பரின் உதவியை நாடியுள்ளார். அதாவது  பேக்பிலிப் எனப்படும் பின்புறமாகக் குதித்தலில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து அதை டிக் டோக்கில் பதிவிட திட்டமிட்டுள்ளார். அதற்கான முயற்சியில் இறங்கிய குமார், பின்புறமாகக் குதிக்கும் போது,  கால்களை தரையில் ஊன்ற முடியாமல் அவர் தடுமாறியுள்ளார். அப்போது அவர் தலையானது  நேரடியாகத் தரையில் மோதியது.இதில் அவரது கழுத்து மற்றும் முதுகெலும்பு உடைந்தது.இதையடுத்து குமாரை  அவரது நண்பர் மருத்துவமனையில் அனுமதித்தார்.

இதுகுறித்து கூறிய மருத்துவர்கள், முதுகெலும்புதான் உடலுறுப்புகளின் செயல்பாட்டுக்கு முக்கிய காரணி. அதனால் அவர் எதிர்காலமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

tiktok

இந்நிலையில்  நேற்று சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார். இது குறித்த கூறியுள்ள அவரது பெற்றோர்,  எங்களின் ஒரே மகன் எங்களை விட்டு சென்றுவிட்டான்,. அவனிடம் ஸ்மார்ட்போன் கிடையாது. நண்பர்கள் கேட்டுக்கொண்டதால்  இப்படிச் செய்திருக்கிறான்’ என்று கண்ணீர்  மல்க கூறியுள்ளனர்.

Most Popular

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....

அடுத்த ஆண்டு இந்தியாவில் டி 20 உலகக்கோப்பை- ஐசிசி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக், விம்பிள்டன் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் வைரஸ் பாதிப்பு எப்போது முடிவுக்கும் வரும் என தெரியாததால் எதிர்வரும்...