Home தமிழகம் டாக்டர் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இருவரையும் போராளிகள் என்று நினைத்தது தப்பா போச்சு! வெளுத்துவாங்கும் டிடிவி தினகரன்

டாக்டர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இருவரையும் போராளிகள் என்று நினைத்தது தப்பா போச்சு! வெளுத்துவாங்கும் டிடிவி தினகரன்

கூட்டணி அமையவில்லை என்றால் 40 தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்கூறியுள்ளார்.

சேலம் : கூட்டணி அமையவில்லை என்றால் 40 தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

நேற்று முதல்வர் எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலத்துக்கு வந்த டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அ.தி.மு.க,பி.ஜே.பி,பாமக கூட்டணி பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அப்போது வழக்கமான நக்கல் சிரிப்புடன் தினகரன் தெரிவித்ததாவது.ஜெயலலிதா இறந்த பின்னர் அவர் குற்றவாளி என்பதால் நினைவிடம் கட்டக்கூடாது எனவும், உயிரோடு இருந்திருந்தால் சிறைக்கு சென்று இருப்பார் என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விட்டு வந்தார். 

கடந்த 2 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி ஊழல் ஆட்சி எனக்கூறி கவர்னரை சந்தித்து மனுவும் கொடுத்தனர்.இவ்வாறு பேசியவர்களுடன் கூட்டணி வைக்கும் இவர்களை (எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்) ஜெயலலிதாவின் ஆன்மா கூட மன்னிக்காது. இது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம். 

இந்த கூட்டணி பலவீனமான கூட்டணி. 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடையும்.அவர்களின் கூட்டணி தற்கொலைக்கு சமமான கூட்டணி. அ.தி.மு.க.வின் கூட்டணி அறிவிப்பு தோற்றுப்போகிறவர்கள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி ஆகும். சந்தர்ப்பவாதிகளான இவர்கள் வெற்றி பெறுவதற்கு எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.தேர்தலுக்கு பின்னர் இவர்களுடன் (அ.தி.மு.க.) கூட்டணி சேர்ந்தவர்கள் காணாமல் போய்விடுவார்கள். 

டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சமூகநீதி போராளிகள் என்று நினைத்தேன்.அவர்கள் இவ்வாறு செய்வார்கள் என்று நினைக்கவில்லை. மேலும் பா.ம.க.வினர் என்ன நினைப்பார்கள்? என்பது தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தலுக்காக ஒன்றாக சேர்ந்துள்ள இவர்கள் இடுப்பில் கல்லைக்கட்டிக்கொண்டு கிணற்றில் குதிக்கப்போகிறார்கள். 

அ.ம.மு.க. கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேசி வருகிறேன்.கூட்டணி அமையவில்லை என்றால் 40 தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் 95 சதவீதம் பேர் எங்களுடன் தான் உள்ளனர். எங்களுக்கு கிளைகள் இல்லாத ஊர் எதுவும் இல்லை. அந்த வகையில் கட்சியை வளர்த்துள்ளோம். பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காது. இதனால் பிரதமர் யார்? என்பதை தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள்.இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

மருத்துவக்கல்லூரி உரிமையாளரிடம், ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் – 5 பேர் கைது

சென்னை மதுரவாயலில் தனியார் மருத்துவக்கல்லூரி உரிமையாளர் வீட்டில் சிபிஐ அதிகாரி போல நடித்து, 10 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய 5 பேரை போலீசார்...

கவர்னர் பதவியை உதறித்தள்ளிய ரஜினிகாந்த்!

கவர்னரா? முதல்வரா? என்ற நிலையில் முதல்வர்தான் என்ற முடிவை எடுத்திருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் கட்சி தொடங்க வேண்டும் என்று ஒரு கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து...

“தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்து விட்டது” – ரஜினிகாந்த் பேட்டி!

கடந்த 2017ம் ஆண்டில் இருந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்பது புரியாத புதிராகவே இருந்து வந்த நிலையில், ஜனவரியில் தான் கட்சி தொடங்குவதாக ரஜினி சற்று முன்னர் அதிகாரப்பூர்வமான...

’பீகாருக்கு ஓவைசி… தமிழ்நாட்டுக்கு ரஜினியா?’ பின்புலத்தில் யார்?

இதோ…. அதோ… என்று கால் நூற்றாண்டாக எதிர்பார்த்துகொண்டிருந்த ரஜினியின் அரசியல் பிரவேசம் நடந்தே விட்டது. ரஜினி தனது அதிகாரபூர்வப் பக்கத்தில் ஜனவரியில் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துவிட்டார். கட்சி தொடர்பான...
Do NOT follow this link or you will be banned from the site!