Home ஆன்மிகம் ஜோதிடத்தை நம்பாததால் மாவீரன் நெப்போலியன் தோற்றான்! எப்படி தெரியுமா?

ஜோதிடத்தை நம்பாததால் மாவீரன் நெப்போலியன் தோற்றான்! எப்படி தெரியுமா?

சுமார் 4000 வருடங்ளுக்கு முன்பே வானில் உள்ள கோள்களின் அடிப்படையில் ஜோதிடம் கணிப்பதில் நமது முன்னோர்கள் மிகச் சிறந்தவர்களாக இருந்திருக்கின்றனர். அந்தக் காலத்தில் வான சாஸ்திரமும் ஜோதிட சாஸ்திரமும் ஓட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளாக சிறந்து இருந்திருக்கின்றன. ஜோதிடம் உண்மையா பொய்யா?

மத குருமார்கள வானியல் வல்லுனர்களாகவும் , மிகச்சிறந்த ஜோதிட விற்பன்னர்களாக அரசுக்கு ஆலோசர்களாகவும் கோலோச்சி இருந்தார்கள். அவர்களின் கணிப்புகள் அப்படியே 100 சதவீதம் பலித்தது.

ariyapatta

கலிலியோவும் ,நியூட்டனும் தோன்றுவதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்னரே கன்னடா , பாஸ்கரா , ஆரியப்பட்டா போன்ற வான சாஸ்திர நிபுணர்கள் இந்தியாவில் தோன்றி வானியல் குறித்து பல அற்புத உண்மைகளை கண்டு பிடித்துள்ளனர். 

பண்டைய எகிப்திய சீன நூல்களிலும், நமது மகாபாரதம்,ராமாயணம் போன்ற இதிகாசங்களிலும் வருங்கால நிகழ்வுகளை கணித்ததாக பல குறிப்புகள் உள்ளன. ஜோதிடம் உண்மையா? பொய்யா?

neopoliyan

மாவீரன் அலெக்ஸ்சான்டரின் அரண்மனையில் இந்திய ஜோதிட நிபுணர்கள் இருந்திருக்கின்றனர் . அவர்கள் அலெக்ஸ்சான்டரின் ஜாதகத்தை கணித்து பாபிலோன் நகரில் நீங்கள் விஷம் வைத்து கொல்லப்படுவீர்கள் என்று எச்சரித்து இருக்கிறார்கள் .

இதனால் பல ஆண்டுகள் பாபிலோன் நகருக்கு அலெக்ஸ்சாண்டார் போவதை தவிர்த்து வந்தார் . இறுதியாக வேறு வழியின்றி பாபிலோன் நகருக்கு சென்ற போது , இந்திய ஜோதிடர்கள் கணித்தபடி , எதிரிகளால் உணவில் , விஷம் வைத்து கொல்லப்பட்டார் . ஜோதிடம் பலித்தது.

இயேசு கிறிஸ்து பிறந்த போது , ஏரோது மன்னனின் அரண்மனையில் இருந்த ஜோதிட நிபுணர்கள் யூத குலத்தில் ஒரு குழந்தை பிறப்பதாகவும் , அந்த குழந்தை யூத மக்களின் தலைவனாக மாறுவான் , ஏரோது மன்னனின் பரம்பரை ஆட்சி அழிந்து விடும் என எச்சரித்தனர்.

jesus

இதனால் கலக்க மடைந்த ஏரோது மன்னன் தனது நாட்டிலுள்ள ஒரு வயதிற்கு உட்பட்ட அனைத்து ஆண் குழந்தைகளையும் கொன்று விட உத்தரவிட்டான் . ஆனால் இயேசு தப்பித்தார் . யூதர்களை காக்கும் கடவுளாகவே மதிக்கப்பட்டார்  ஜோதிடம் பலித்தது.
 

kamsan

கம்சன் கதையும் கிட்டத்தட்ட இதுவேதான் . தனது தங்கைக்கு பிறக்கும் 8 வது குழந்தையால் தனது உயிருக்கு ஆபத்து என்று ஜோதிடம் சொல்லியதால் , தங்கையையும் அவளது கணவனையும் சிறையில் அடைத்து பிறந்த குழந்தைகளைக் கொன்றான் . ஆனாலும் கிருஷ்ணன் தப்பிக்கக் கடைசியில் கம்சனை வதம் செய்தார்  ஆக ஜோதிடம் பலித்தது . 

ஜூலியஸ் சீசரின் அரண்மனையில் ஸ்பூரினா என்ற புகழ் பெற்ற ஜோதிட நிபுணர் இருந்தார் . தனது நண்பர்களாலேயே ஜூலியஸ் சீசர் கொல்லப்படுவார் என சீசரை முன் கூட்டியே எச்சரித்திரிந்தார் . அப்படியே நடந்தது . ஜோதிடம் பலித்தது. 

julius caesar

நெப்போலியன் காலத்தில் லினோர் மாண்ட் என்ற பெண் ஜோதிட நிபுணர் மிகவும் புகழ்பெற்று விளங்கினார் . மாஸ்கோ மீது படையெடுத்துச் சென்றால் தோல்வி நிச்சயம் என இவர் நெப்போலியனை எச்சரித்தார் . ஆனால் அதை நெப்போலியன் பொருட்படுத்தாமல் ரஷ்யா மீது படை நடத்திச் சென்று தோல்வியைத் தழுவினார் . ஜோதிடம் பலித்தது சோதிடம் என்பது உண்மையா பொய்யா?. 

இவ்வாறு பண்டைகாலம் தொட்டே வரலாற்றின் பக்கங்களில் ஜோதிடக் கலைக்கு பல ஆதாரங்கள் உள்ளன. குழந்தைகள் பிறந்த மாதம் , நேரம் அடிப்படையில் ஜாதகம் கணிக்கும் வழக்கும் ஏற்பட்டு , புதிய பாபிலோனின் காலம் கி . மு . 600 முதல் 300 வரை உள்ள காலக் கட்டத்தில் கணிக்கப்பட்ட 16 ஜாதகங்கள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இப்படி உயர்ந்த கலையாக , விஞ்ஞானமாகக் போற்றப்பட்ட ஜோதிடம் இன்று வெறும் ஏமாற்று வேலை , உண்மையில்லை என்று இதன் வரலாறு , சூட்சமங்கள் அறியாமையில் பிதற்றுகிறார்கள்.  ஜோதிடக் கலையை இவர்கள் மறுப்பதற்கு அடிப்படை காரணம் ஒன்று தான்.

julius caesar

கிரகங்கள், சூரிய, சந்திரர்கள், மனிதர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதை உண்மையை ஒத்துக்கொண்டாலும், தாக்கங்கள் பூமியில் குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி ஜாதகம் , குணநலன் தானே அமையும் .

எப்படி மாறுதல் , வித்தியாசம் ஏற்படும் என்பது தான் . இதனால் ஜோதிடம் உண்மையில்லை என்று கூறுகிறார்கள் ஜோசியம் உண்மையா, பொய்யா?.

உத்தரகாண்ட் மாநிலம் சஹரன்பூரில் ஒரு கிராமத்தில் பெற்றோர்கள் தங்கள் இறந்த குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். மிர்பூர்  அருகே உள்ளது  மோகன்பூர் கிராமத்தை சேர்ந்தவர்  ராமேஷ்வர் இவர் தனது இறந்த மகளுக்கு ஒருவரை திருமணம் செய்து வைத்தார்.

baskara

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் 8 வயதில் அவரது மகள் இறந்து விட்டார். இறந்த மகளின் திருமணத்தை ராமேஷ்வர் வெகு விமரிசையாக நடத்தினார் இதில் 100க்கும் மேற்பட்ட விருந்தினர் கலந்து கொண்டனர். 

இந்த திருமணம் இந்து மதம் சடங்குகள் மூலம் நடத்தப்பட்டது.  மேலும்,இந்த திருமணத்தில் வரதட்சணை பரிமாற்றம் கூட நடந்தது. பொம்மை மணமகன், பொம்மை மணமகளை வைத்து இந்த திருமணமும், திருமண சடங்குகளும் நடந்தன.

kerala

இந்த திருமணம் குறித்து கிராமவாசி சுபண்ணா கூறும் போது :- ”இது மிகப்பழமையான பாரம்பரியம் ராமேஷ்வர்  நாட்பாஷி சமூகத்தைச் சேர்ந்தவர் அதனால் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.” என கூறினார். ஆனால் இந்த சமூக உறுப்பினர்கள் குழந்தைகள் திருமணத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை.

இறந்தவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் அவர்கள் பிரம்மசாரிகளாக இருக்க மாட்டார்கள் என்கின்ற நம்பிக்கை இவர்களிடத்தில் அதிகமாக இருந்ததால் இவர்கள் இவ்வாறு கடைப்பிடித்து வந்துள்ளனர்.

இதே போல் பல்வேறு எடுத்துகாட்டுகளை நாம் கூறிக் கொண்டே செல்லலாம். ஜோதிடர்கள் பொய்த்துள்ளனர் ஆனால் ஜோதிடம் பொய்த்து போவதில்லை என்பதற்கு உதாரணம் தான் மேலே கூறிப்பிட்டு உள்ள எதார்த்தமான நிகழ்வுகள் ஆகும் . 

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews