Home ஆன்மிகம் ஜோதிடத்தில் சகுனங்களின் பலன்கள்

ஜோதிடத்தில் சகுனங்களின் பலன்கள்

ஜோதிட சாஸ்திரத்தில் சுப மற்றும் அசுப சகுனங்கள் பற்றியும் அதன் விளக்கங்களை பற்றியும் தெரிந்து கொள்வோம்.

மூட நம்பிக்கை என்று பலவற்றையும் ஒதுக்குபவர்கள் கூட, சகுனங்கள்,நிமித்தங்கள் ஆகியவற்றில் தங்களை அறியாமலே நம்பிக்கை வைத்திருப்பார்கள்.

sagunam

அதனால்தான் இன்றும் சுபகாரியங்கள் நடக்கும் இடங்களில் மங்கல வாத்தியங்கள் முழங்கப் படுகின்றன. அதாவது அந்த நல்ல காரியங்கள் நடக்கும் நேரத்தில் அபசகுன வார்த்தைகள் காதில் விழாமல் இருக்க, மந்திர உச்சாடனங்களும், மங்கல வாத்திய ஒலிகளின் அதிர்வலைகளும் அதை நல்லதாக மாற்றிவிடும்.

 நிமித்தங்கள் என்பவை நாம் எதிர்பாராமல் சுற்றுப்புறத்தில் நடப்பவை, நம்மை எதிர் நோக்கி இருப்பவை, கேட்கக்கூடிய சப்தங்கள் ஆகியவை.

sagunam

நாம் ஒரு விஷயம் பேசிக்கொண்டிருக்கும்போதோ, ஒரு காரியம் நடத்திக் கொண்டிருக்கும்போதோ, பக்ஷிகள், விலங்குகள், பல்லி போன்ற ஜந்துக்களால் ஏற்படுத்தப்படும் ஒலிகள், சப்தங்கள்,மனிதர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் ஆகியவைகளால் நம் மனதில் ஏற்படக்கூடிய உணர்வுகள்  சம்பந்தப்பட்டவை.

தானே ஏற்படும் இந்த நிமித்தங்களை நம்மால் மாற்ற முடியாது.  சகுனம் என்பதும் இவற்றைப் போலவே இருந்தாலும், சில சமயம் நம்மால் ஏற்படுத்திக்கொள்ள முடியும். மாற்றி அமைத்துக் கொள்ளவும் முடியும்.

sagunasasthiram

ஜாதகத்தின் கால புருஷனின் லக்னம் மேஷமாகும். அதன் ஏழாம் வீடு துலாம் ஆகும். அதன்அதிபதி சுக்கிரன் ஆகும். ஒன்றுக்கொன்று ஏழாம் வீடாக வருவதால் சுபத்தன்மை நிறைந்தவையாக பார்க்கப்படுகிறது.

ஆகவே, சுக்கிரனின்  காரகத்துவம் உள்ள பொருட்களெல்லாம் சுபத்தன்மை நிறைந்தவை. அதேபோல் கால புருஷனின் பாதகாதிபதி சனி.  ஆகவே, அவர் சம்பந்தப்பட்ட பொருட்களெல்லாம் அசுபத்தன்மை நிறைந்தவையாக பார்க்கப்படுகிறது

சுப சகுனங்கள் :

நாதஸ்வர இசை,  ஆலயமணி ஓசை,  கல்யாண கோலம்,  திருமணத்திற்கு பெண் அழைத்துச் செல்லுதல், கோயில் பூஜை, பசுமாடு எதிரில் வருதல், தம்பதிகள் ஜோடியாக எதிரே வருதல், பசுவும் கன்று சேர்ந்து வருதல்,  நாய் சந்தோஷமாக விளையாடுதல், திருமணத்திற்கு பெண்பார்க்கச் செல்லுதல்,  பூஜை பொருட்கள் கொண்டு செல்லுதல், பெண் பூப்படைம் செய்தி,  குழந்தை பிறந்த செய்தி வருதல், அழுக்கு நீக்கியத் துணியை கொண்டு வருதல், தெய்வ விக்கிரகங்கள் வீதி உலா வரும் காட்சி, கன்னிபெண் நிறைகுடமாக தண்ணீர் கொண்டு வருதல், பூ மாலை கொண்டு வரும் காட்சி, பிரசவம் முடிந்து குழந்தையை கொண்டு வரும் காட்சி, கிரக பிரவேசம், திருமணம்,  பூணூல் கல்யாணம் ஆகியவற்றைக் காணுதல் .

sagunam

குடை ,கொடி ,கரும்பு ,அக்ஷதை ,பச்சை மாமிசம்,கள் ,தாசி ,யானை ,பூக்கள் ,கன்னி பெண் ,சுமங்கலி ,படுக்கை ,பால் ,கருடன் ,நரி ,மான் ,கண்ணாடி ,மயில் ,அன்னம் தேன் ,சந்தனம் ,தயிர் ,வாசனை பொருள்கள் ,பிணம் ,வெள்ளி ,சாதம் ,அரிசி ,இரட்டை பிராமணர் ,முத்து ,அரசன் ,பொரி ,பழங்கள் ,நிறை குடம் ,மங்கள வாத்தியம்,சுப சீர் வரிசை ,சலவை வஸ்திரம் ,குதிரை ,பசு ,எருது ,பறவை கூட்டம் 

 
அசுப சகுனங்கள் :

அணையும் விளக்கு, தண்ணீர் பாத்திரம் சாய்ந்து நீர் வெளியேறுவது, உடுத்திய ஆடை கிழிவது, செருப்பு அறுந்து போதல், அமங்கல வார்த்தை,   ஒற்றைத் தும்மல், சத்தமான வார்த்தைகள், வீட்டில் மரம் முறிதல், பல்லி இடப்புறம் கத்துவது, பன்றி, பாம்பு, குதிரையைக் காண்பது, சத்தமிடல், எண்ணெய்க் குடம், விளக்குமாற்றை கையில் வைத்திருப்பது, தன் நட்சத்திரத்துக்கு உரிய பட்சி இடமிருந்து வலமாகச் செல்வது , விருட்சம் சாய்வது, மிருகம் இறந்து விட்டதாகக் கேட்பது,  எருமை மாடு ஆகியவை அசுப சகுனமாகும்.

sagunam

 மொட்டை தலை ,சந்நியாசி ,ஒற்றை பிராமணர் ,பயங்கர வேஷதாரி ,அணைந்த விளக்கு ,வெற்று குடம் ,கருப்பு துணி அணிந்தவர் ,ஜடாதாரி 
குருடர்,ஈரமான ஆடை அணிந்தவர் ,கந்த ஆடை அணிந்தவர் ,குரங்கு ,பன்றி உரும்புதல்,கோடரி ,கடபாறை ,பலி கொடுக்கும் பொருள்கள் ,புண்ணாக்கு ,உலக்கை ,தும்மல் ,விம்மி அழுதல் ,ஐயோ என்ற குரல் ,இடி ஓசை ,குள்ளன் ,ஆயுதம் ஏந்திய மனிதன்.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews