Home ஆன்மிகம் ஜென்ம நட்சத்திரன்போது தெய்வத்தை வழிபடுங்கள் ! கர்ம வினைகள் தீரும் !

ஜென்ம நட்சத்திரன்போது தெய்வத்தை வழிபடுங்கள் ! கர்ம வினைகள் தீரும் !

உண்மையான பிறந்த நாள் -ஜென்ம நட்ச்சத்திர மகிமையும் , ஜென்ம நட்சத்திரத்தில் செய்யவேண்டியவையும், ஒரு விரிவான அலசல்

ஜென்ம நட்சத்திரன்போது தெய்வத்தை வழிபடுங்கள் ! கர்ம வினைகள் தீரும் !

உண்மையான பிறந்த நாள்ஜென்ம நட்சத்திர மகிமையும் , ஜென்ம நட்சத்திரத்தில் செய்யவேண்டியவையும், ஒரு விரிவான அலசல்

 

ஒவ்வொரு சாஸ்திர சம்பிரதாயத்தின் பின்னும் உள்ள காரணங்கள் அர்த்தம் பொதிந்தவைஅந்த வகையில் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டால், லக்கினம் ஆன்மாவையும் , சந்திரன் நின்ற இடம் ராசி எனப்படும், ராசி இந்த உடலையும் குறிக்கும், சந்திரனானது ஒரு ராசியில், ஏதோ ஒரு நட்சத்திர பாதத்தில் இருக்கும், அதுவே எமது பிறந்த நட்சத்திரம் ஆகும். பிறந்த நட்சத்திரம் , அந்த நட்சத்திரத்துக்கு அதிபதி, இந்த உடலை இயக்குபவர்கர்ம வினைகளுக்கேற்ப இந்த உடல் அனுபவிக்கும் நன்மைகளுக்கு காரணமானவர்கள் இந்த ஜென்ம நட்சத்திரம் , அதன் அதிபதி. .

STAR

இதனாலேயே, குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திர தினம் குறிப்பிடப்பட்டுள்ளதுஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும்

 

அனைத்து வித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்கள் ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரங்கள்.  ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப்படும் வழிபாட்டால், எந்த ஒரு தெய்வமும் அருள் செய்தே தீர வேண்டும் என்பது பிரபஞ்ச இறை சட்டமாகும்ஜென்ம நட்சத்திர வழிபாட்டில் உள்ள ஆன்மீக ரகசியமே இது தான். எனவே ஜென்ம நட்சத்திர வழிபாடு வாய்ப்பை ஒரு போதும் தவற விட்டு விடாதீர்கள்.  குறைந்தபட்சம் ஆலயத்தில் ஒரு அகல் விளக்காவது ஏற்றி வழிபாடு செய்யுங்கள் . ஜென்ம நட்சத்திரத் தினத்தன்று எந்த ஆலயத்துக்கு சென்று, உங்கள் ஜாதகம் மூலம், (தீமைகள் அகல, தோஷம் விலக ) எந்த கடவுளை வழிபட வேண்டும் என்று தெரிந்து வைத்து கொண்டு வழிபாடு செய்தால் கர்ம வினைகள் தீரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும், ஏழைஎளியவர்களுக்கு தானங்கள் செய்தால், அவரது பித்ருக்களின் மனம் மகிழ்ந்து முழுமையான ஆசி கிடைக்கும்ஜென்ம நட்சத்திர வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் அவரை கண் திருஷ்டி நெருங்காது . தடைபடும் செயல்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்ஜென்ம நட்சத்திரத்தினத்தன்று அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆலயங்களில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் செய்வது நல்லதுவசதி இருப்பவர்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று ஹோம வழிபாடு செய்தால் கூடுதல் பலனை பெற முடியும் . ஜென்ம நட்சத்திர வழிபாட்டுக்கு அத்தகைய சக்தி உள்ளது

 

ஜென்ம நடச்சத்திரத்தின் மகிமைக்கு உதாரணமாக இந்த கதையையும் கூறுகிறேன்வினை காரணமாக சிவபெருமானிடம் இருந்து பிரிந்து மாங்காட்டில் தவம் இருந்த பார்வதி தேவி, இறுதியில் தனது ஜென்ம நட்சத்திர தினத்தன்று மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்ட பிறகே கணவருடன் சேர்ந்து வாழும் நிலை உண்டானது. இதன் மூலம் ஜென்ம நட்சத்திரத்தின் மகிமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்ஒவ்வொரு மாதமும் ஜென்ம நட்சத்திரம் எந்த தேதியில் வருகிறது என்பதை காலண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அன்றைய தினம் எவ்வளவு வேலை இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி ஆலயத்துக்கு சென்று தனது ஜென்ம நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்அது ஜென்ம நட்சத்திரத்தை பலம் பொருந்தியதாக மாற்றும்நிறைய பேர் இதை அறியாமல் ஆங்கில தேதியை அடிப்படையாகக் கொண்டு பிறந்த தினத்தன்று ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்கிறார்கள். இது தவறுஅதிலும் குறிப்பாக ஜென்ம நட்சத்திர திதியின் அதி தெய்வம் எது என்பதை அறிந்து வழிபட்டால் 100-க்கு 100 வெற்றியைப் பெறலாம்பிறந்த நாளில் ஆத்ம திருப்திக்கு கோவில் சென்றாலும் , அர்ச்சனை செய்யும் பொது கூட, பிறந்த நட்ச்சத்திரத்தை கூறி அர்ச்சனை செய்கிறோமே தவிர பிறந்தநாளை யாரும் கூறுவதில்லை.

 

Courtesy: Scientific Astrologer, S.MADHUSUDHANAN, MBA, M.Phil(Mgt), D.Astro.,

ஜென்ம நட்சத்திரன்போது தெய்வத்தை வழிபடுங்கள் ! கர்ம வினைகள் தீரும் !
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

நிலத்தை அபகரித்த ராமர் கோயில் அறக்கட்டளை செயலாளர் – குற்றம்சாட்டிய பத்திரிகையாளர் மீது 18 பிரிவுகளில் வழக்கு!

ராமர் கோயிலுக்காக அயோத்தி நிலத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் ‘ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’அறக்கட்டளை சார்பில் நிலம் வாங்கியதில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது அயோத்தியில் மார்ச் 18ஆம்...

இந்த ஆட்சியானது தாய்ப்பறவை போல செயல்படுகிறது…பாரதிராஜா மகிழ்ச்சி

மு. க. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் சென்று முதல்வருக்கு நேரில் வாழ்த்து சொன்னார் இயக்குனர் பாரதிராஜா. இந்நிலையில் தற்போது கொரோனா...

சிபிஎஸ்இ +2 தேர்வு தொடர்பான வழக்குகள் நாளை விசாரணை!

டபுள் மாஸ்க் அணிவித்து சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மாணவர் தரப்பு வாதம் செய்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக...

தமிழ்நாட்டில் மட்டும் கொரோனா 2ஆம் அலை கோரதாண்டவம் ஆடியது ஏன்? – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கொரோனா முதல் அலை எட்டு மாதங்கள் நீடித்தது. இந்த அலை ஓரளவு குறைந்து வந்தடையடுத்து பிரதமர் மோடி கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டதாகப் பெருமிதம் தெரிவித்தார். கொரோனாவை வென்றுவிட்டதாக அவர் சொன்ன...
- Advertisment -
TopTamilNews