Home அரசியல் ஜூனியர் ஜெயக்குமார் ஃபோட்டோவை ரிலீஸ் பண்ணட்டா? பரபரப்பு கிளப்பும் சிந்து

ஜூனியர் ஜெயக்குமார் ஃபோட்டோவை ரிலீஸ் பண்ணட்டா? பரபரப்பு கிளப்பும் சிந்து

அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்ததாக கூறப்படும் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடட்டுமா என சிந்து கூறிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிறந்ததாக கூறப்படும் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடட்டுமா என சிந்து கூறிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இளம்பெண்ணை கர்ப்பமாக்கியதாக அப்பெண்ணின் தாயாரும், அமைச்சரும் பேசுவது போன்ற ஆடியோவும், ஜெயக்குமாருக்கும் இளம்பெண்ணுக்கும் குழந்தை பிறந்ததற்கான பிறப்பு சான்றிதழும் வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த ஆடியோ போலியானது இதன் பின்னணியில் டிடிவி தினகரன் இருக்கிறார் என ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

ஆனால்,ஜெயக்குமார் குறித்த ஆடியோவை வெளியிட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கூறியிருந்தார். மேலும் எங்களிடம் இருக்கும் ஆடியோவை வெளியிட்டால் ஜெயக்குமார் குடும்பத்துடன் தூக்கில் தொங்க வேண்டும் எனவும், ஜெயக்குமார் பதவியில் இருந்து விலகினால் அவர் மீது பாதிக்கப்பட்ட சிந்து புகார் கொடுப்பார் எனவும் அவர் கூறியிருந்தார்.

jayakumar

இதற்கிடையே சிந்துவை ஜெயக்குமார் தரப்பினர் சமரசம் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கின்றனர் எனவும்.அதற்கு சிந்து ஒப்புக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஜெயக்குமார் தரப்பினரால் தங்களது உயிருக்கு ஆபத்து வரலாம் என்ற எண்ணத்தில் சிந்து தற்போது யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. மேலும், சூப் கடை வைத்திருக்கும் சந்தோஷ்குமார் என்பவர் சிந்து மீதும் அவரது தாயார் மீதும் பண மோசடி புகாரை காவல்துறையில் அளித்திருக்கிறார். இதன் பின்னணியிலும் ஜெயக்குமார்தான் இருக்கிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது புகைப்படத்தை வெளியிடாமல் சிந்து பத்திரிகையாளர்களிடம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நான் நான்கு மாத கர்ப்பிணியாய் இருந்தபோதே அமைச்சரிடம் பேசினேன். ஆனால் அவர்தான் ஜப்பான் செல்கிறேன் போய்ட்டு வந்து பார்த்துக்கலாம் என சொன்னார். எனது குழந்தைக்கு அமைச்சர் ஜெயக்குமார்தான் தந்தை என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது.

kumar

எங்கள் மீது பொய் வழக்கு போட்டு அடக்க முயற்சித்தால் எங்களிடம் இருக்கும் அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் வெளியிடுவோம். என் குழந்தையோட முகம் அவர் சாயலில்தான் இருக்கு. டிஎன் ஏ டெஸ்ட் எடுக்க நான் தயார் அவர் தயாரா? என கேள்வி எழுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த விவகாரம் குறித்து இதுவரை அமைதியாக இருந்த சிந்து தற்போது பேச துவங்கியிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதால் அமைச்சர் ஜெயக்குமார் கடும் அப்செட்டில் இருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர். ஆகமொத்தம் சிந்து பேச தொடங்கி இருப்பது உண்மை என்றால் இந்த விவகாரம் ஜெயக்குமாரின் அரசியல் அஸ்திவாரத்தை தரைமட்டமாக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

மாவட்ட செய்திகள்

Most Popular

வேளாண் சட்டங்களை அமல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு

வேளாண் சட்டங்களை அமல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடக்கோரிய பொது நல வழக்கில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு...

கழிவு மண் விளக்குகளை சுத்தம் செய்து வர்ணம் பூசி மறுவிற்பனை.. குழந்தைகளின் கல்விக்கு நிதி திரட்டும் குழு

சண்டீகரை சேர்ந்த ஒரு குழு, வேண்டாம் ஒதுக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட மண் விளக்குகளை சுத்தம் மற்றும் வர்ணம் பூசி அவற்றை மறுவிற்பனை செய்கிறது. அதில் கிடைக்கும் வருவாயை ஏழை குழந்தைகளின் கல்விக்காக...

தங்கம், வெள்ளி வேஸ்ட்… வெங்காயம்தான் பெஸ்ட்… 58 மூடை வெங்காய மூட்டைகளை லபக்கிய புனே திருடர்கள்..

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ரூ.2.35 லட்சம் மதிப்பிலான 58 வெங்காய மூடைகளை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டின் சில பகுதிகளில் பெய்த...

ஊழல் அரசியல் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகி விட்டது..ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு நாளில் முடிந்து விடாது.. மோடி

பல மாநிலங்களில் ஊழல் அரசியல் பராம்பரியத்தின் ஒரு பகுதியாகி விட்டது. ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு நாளில் முடிந்து விடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
Do NOT follow this link or you will be banned from the site!