Home சினிமா ஜில்லுனு ஒரு ஜோடி.... வாழ்விலும் இணைந்த ரியல் கதாநாயகன், கதாநாயகி!

ஜில்லுனு ஒரு ஜோடி…. வாழ்விலும் இணைந்த ரியல் கதாநாயகன், கதாநாயகி!

ஜோதிகா வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். இவருக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. சூர்யா, ஜோவுக்கு தமிழ் கற்றுக்கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் நடிகைகள் பலர் உண்டு. அந்த வரிசையில் இன்றைய இளசுகளால் என்றுமே பொறாமைப்படும் அளவுக்கு பேசப்பட்ட நட்சத்திர ஜோடி சூர்யா ஜோதிகா தான்.  

jo

ஜோதிகா வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். இவருக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. சூர்யா, ஜோவுக்கு தமிழ் கற்றுக்கொடுத்துள்ளார். காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்த சிவக்குமார், நீண்ட இழுப்பறிக்கு பின்னர்தான் சூர்யா- ஜோதிகா காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் நாளடைவில் அவரது வாயிலிருந்தே நானே பார்த்திருந்தால்கூட சூர்யாவுக்கு இப்படி ஒரு பெண்ணை பார்த்திருக்க மாட்டேன் என கூறியதுதான் அல்ட்டிமேட்.  காதலிக்கும்போது தனிக்குடுத்தனம் செல்ல வேண்டும் என யோசித்த ஜோதிகா – சூர்யா ஜோடி  திருமணத்திற்கு பிறகு அந்த முடிவை மாற்றிக்கொண்டு கூட்டுக்குடும்பத்தில் இனிதே வாழ்வை தொடங்கினர். திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்குப்போட்ட ஜோ, குழந்தை பேறு, குழந்தை வளர்ப்புக்கு பின் நடிப்பில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். 

jo

 
திரைப்படத்தின் மூலம் ஜோடியாக திரையுலகில் நுழைந்த சூர்யா-ஜோதிகா ஜோடிகள் நிஜ உலகிலும் சிறந்த ஜோடியாக உருவெடுத்தது. திருமணத்திற்கு முன் ‘காக்க காக்க’, ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘பேரழகன்’, ‘மாயாவி’, ‘உயிரிலே கலந்தது’ போன்ற படங்கள் ஒருவரது நடிப்பிலும் மாஸ் ஹிட் அடித்தது. ஆனால் திருமணத்திற்கு பின் நடிப்பிற்கு ரீஎண்ட்ரி கொடுத்த ஜோதிகா, சூர்யாவுடன் இணைந்து நடிக்கவில்லை. இருப்பினும் அவர் சூர்யாவின் தயாரிப்பில் நடித்து வருகிறார். 

suriya

சூர்யா- ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் காக்க காக்க. இதில் சூர்யா போலீஸாகவும், ஜோதிகா ஆசிரியராகவும் நடித்திருப்பர். இப்படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படமும் 100 நாட்களுக்கு மேல் ஓடி ஜாக்பாட் அடித்தது. 

இதையடுத்து இவர்கள் இருவருடைய நடிப்பிலும் 100 நாட்களை கடந்து ஓடி சாதனைபடைத்த படம் பேரழகன். சூர்யா இப்படத்தில் இரட்டை வேடத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.  சசி சங்கர் இயக்கிய இப்படத்தில் விவேக், மனோரமா மற்றும் மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

suriya

இதையடுத்து சூர்யா நடிப்பில் வெளியான ஜில்லுனு ஒரு காதல் திரைப்படம் 100 நாட்களை கடந்து சாதனை படைத்தது. என் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

Most Popular

5 நாளில் ரூ.6.74 லட்சம் கோடி நஷ்டம்… முதலீட்டாளர்களை கலங்க வைத்த பங்கு வர்த்தகம்..

இந்திய பங்குச் சந்தைகளில் நேற்றுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில் பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 1,457 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. கடந்த திங்கள்...

டெல்லி அசத்தல் வெற்றி… சென்னை சூப்பர் கிங்ஸ் பரிதாப தோல்வி! #IPL #CSKvsDC

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்றாம் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்ஷிப் கொண்ட டெல்லி கேப்பிடல்ஸ் அணியோடு மோதுகிறது.

பண்ணை வீட்டுக்கு வந்தது எஸ்பிபியின் உடல்… நாளை காலை 7 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி

எஸ்.பி.பியின் உடல் தாமரைப்பாக்கம் பண்ணைவீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 50 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ். பி....

எஸ்பிபியை கவுரவித்த முதலமைச்சர் பழனிசாமிக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி!

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். 50...
Do NOT follow this link or you will be banned from the site!