Home இந்தியா ஜியோவின் 2020 ஆஃபர்! வாடிக்கையாளர்களை திணறடிக்கும் ஜியோ!!

ஜியோவின் 2020 ஆஃபர்! வாடிக்கையாளர்களை திணறடிக்கும் ஜியோ!!

வாடிக்கையாளர்களை ஈர்க்க, தக்க வைக்க புதிய புதிய திட்டங்களை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. குறிப்பாக ஜியோ அவ்வப்போது அதிரடி ஆஃபர்களை அள்ளிக்கொடுத்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவருகிறது. அதன்படி, 2020 புத்தாண்டை முன்னிட்டு ‘ஹேப்பி நியூ இயர் ஆஃபர்’ என்ற சலுகையை அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களை ஈர்க்க, தக்க வைக்க புதிய புதிய திட்டங்களை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. குறிப்பாக ஜியோ அவ்வப்போது அதிரடி ஆஃபர்களை அள்ளிக்கொடுத்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவருகிறது. அதன்படி, 2020 புத்தாண்டை முன்னிட்டு ‘ஹேப்பி நியூ இயர் ஆஃபர்’ என்ற சலுகையை அறிவித்துள்ளது.

புத்தாண்டை கொண்டாடும் விதமாக 2020 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து அடுத்த ஆண்டு முழுவதும்  நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, இலவச 
வாய்ஸ் கால்( இலவச ஜியோ டூ ஜியோ அழைப்புகள் மற்றும் 1200 நிமிடங்கள் ஜியோ அல்லாத அழைப்புகள்), இலவச எஸ்எம்எஸ் உள்ளிட்ட சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சலுகை இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் ஆகும்.

Jio

இதேபோல் 2020 ரூபாயை கொடுத்து ஜியோ ஃபோன் வாங்கினால் வரம்பற்ற வாய்ஸ், இலவச எஸ்எம்எஸ் சேவைகள், ஒருநாளைக்கு 0.5 ஜிபி வீதம் டேட்டா சேவை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படும் என ஜியோ அறிவித்துள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

எம்ஜிஆர் செய்த அந்த செயலை உதயநிதி செய்ய முடியுமா? அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,...

27 ஆம் தேதி வெளியே வரும் சசிகலாவால் ஆட்டம் காணப்போகிறார் எடப்பாடி- முக ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டம் – எடப்பாடி தொகுதிக்குட்பட்ட குரும்பப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

திராவிட இயக்கத்தை அசைத்து பார்க்க சிலர் முயற்சி ஆனால் இங்கு யாரும் நுழைய முடியாது- அமைச்சர் செங்கோட்டையன்

எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாளையொட்டி கே.கே.நகர் சிவன் பார்க் எதிரில் உள்ள பொப்பிளி ராஜா சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் முன்னாள் அமைச்சர், அமைப்பு...

வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ. மீது தாக்குதல்- தொழிலதிபர் கைது

கோவை கோவையில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய தனியார் மில் உரிமையாளரை போலீசார் கைதுசெய்தனர். கோவை ஆர்.எஸ்.புரம்...
Do NOT follow this link or you will be banned from the site!