Home அரசியல் ஜார்கண்ட் பா.ஜ.க முதல்வர் ரகுபர் தாசுக்கு பின்னடைவு!

ஜார்கண்ட் பா.ஜ.க முதல்வர் ரகுபர் தாசுக்கு பின்னடைவு!

ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் பாரதிய ஜனதா ஆட்சியை தக்க வைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கு ஏற்ப ஜார்கண்ட் முக்தி மோட்சா – காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது.

ஜார்கண்ட் முதல்வர் 771 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் பாரதிய ஜனதா ஆட்சியை தக்க வைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கு ஏற்ப ஜார்கண்ட் முக்தி மோட்சா – காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆனால், இது தற்காலிகமானதுதான், பாரதிய ஜனதா வெற்றிபெற்று ஆட்சியை அமைக்கும் என்று அம்மாநில முதல்வர் ரகுபர் தாஸ் தெரிவித்திருந்தார்.

raghubar-das polled vote

மேலும், இன்னும் பல சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டியுள்ளது. இதனால், முன்னணியை நம்ப முடியாது என்று கூறியிருந்தார். அவர் கூறியது அவருக்கே நிஜமாகிவருகிறது. ரகுபர் தாஸ் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் அவரை விட சுயேட்சை வேட்பாளர் சராயு ராய் என்பவர் முன்னிலை பெற்றுள்ளார். அவர், 14,479 வாக்குகள் பெற்றுள்ளார். ரகுபர் தாஸ் 13,708 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையே 771 வாக்குகள் வித்தியாசம். இந்த நிலை தொடருமா, மாறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“என்னது 10.5% ஒதுக்கீட்டிற்கு ராமதாஸ் காரணமா?… அத வேற யாருட்டயாவது சொல்ல சொல்லுங்க” – சுளுக்கெடுத்த வேல்முருகன்!

பாமகவை விட்டு பிரிந்து வந்ததிலிருந்தே தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ராமதாஸைக் கடுமையாக விமர்சித்துவருகிறார். தற்போது 10.5% உள் ஒதுக்கீடு குறித்து ராமதாஸை விமர்சித்திருக்கிறார். இன்று காலை செய்தியாளர்களைச்...

கமலுக்கு நன்றி சொன்ன திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சீட்டுதான் ஒதுக்கப்படும் என்று திமுக தெரிவித்ததால், தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்த நிலையில், நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தி வந்தபோது, 6 சீட்டு வேண்டாம்...

முத்தூட் பைனான்ஸ் குழுமத்தலைவர் காலமானார்!

பிரபல நிதி நிறுவனங்களுள் ஒன்றான முத்தூட் பைனான்ஸ் குழுமத்தலைவர் எம்.ஜி.ஜார்ஜ் உடல்நலக்குறைவால் காலமானார். நாட்டில் நகைக் கடன் வழங்கும் பிரபலமான நிறுவனம் முத்தூட் பைனான்ஸ். நாடு...

சூடான சுந்தர்… சுலுக்கெடுத்த அக்சர் – இன்னிங்ஸ் வெற்றி கண்ட ‘கிங்’ கோலியின் போர்ப்படை!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்துடன் யார் மோதப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4ஆவது டெஸ்ட் அகமதாபாத்தில் தொடங்கியது. முந்தைய போட்டியில் ஆடுகளத்தின் தன்மை...
TopTamilNews