Home தமிழகம் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவதற்கான வயது 18 லிருந்து 21 ஆக உயர்வு

ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவதற்கான வயது 18 லிருந்து 21 ஆக உயர்வு

ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவதற்கான குறைந்தபட்ச வயது 18 இல் இருந்து 21ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவதற்கான குறைந்தபட்ச வயது 18 இல் இருந்து 21ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் விமரிசையாக நடைபெற உள்ளன. இதற்காக காளைகளும், காளைகளை அடக்க மாடுபிடி வீரர்களும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் மாடு பிடி வீரர்களுக்கான வயது நிபந்தனையை அரசு மாற்றியுள்ளது. இதுவரை 18 வயது முதல் 45 வயதுடைய நபர்கள் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு குறைந்தபட்ச வயது 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 18 வயதுடையவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாவதாகவும், இதனை தவிர்க்கவே புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார். 

jallikattu

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்ள மாடுபிடி வீரர்களுக்கான உடல்தகுதி பரிசோதனை நாளை நடைபெறும் என்றும், பாலக்காடு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்பவருக்கான உடல் தகுதி பரிசோதனை நாளை மறுநாள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

ஸ்டாலினை குரங்கு என விமர்சித்த அமைச்சர் செல்லூர் ராஜூ

முதல்வரின் தீர்க்கமான நடவடிக்கையால் நிவர் புயல் பாதிப்பு குறைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, “...

அறிமுகமானது சாம்சங் ஏர்டிரெஸ்சர் – விலை எவ்வளவு தெரியுமா?

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த, சாம்சங் ஏர்டிரஸ்சர் கருவியை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இந்தியாவில் அல்ல, இங்கிலாந்தில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சரிவு கண்ட பங்கு வர்த்தகம்.. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.59 ஆயிரம் கோடி லாபம்…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 110 புள்ளிகள் உயர்ந்தது. பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது....

நெட்பிளிக்ஸிடம் விற்கப்பட்டது மாஸ்டர்

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்த படத்தின் ஒட்ட்மொட்த உரிமையையும் லலித் கைப்பற்றியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது...
Do NOT follow this link or you will be banned from the site!